மட்டன் மசாலா

ஆட்டுக்கால் சால்னா

 தேவையான பொருட்கள்   :

 

ஆட்டுக்கறி        – முக்கால் கிலோ

வெங்காயம்        – 2 (பொடித்தது)

தக்காளி                 – 2 (பொடித்தது)

பட்டை                  – 2

லவங்கம்          – 2

கறிவேப்பிலை           – 2

கொத்தமல்லி      – 1 பிடி

மிளகாய்த்தூள்           – 1½ டேபிள்ஸ்பூன்

தனியாத்தூள்       – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சத்தூள்        – 1 டேபிள்ஸ்பூன்

கரம்மசாலா        – 1 டேபிள்ஸ்பூன்

சோம்பு            – 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி             – 1 அங்குலத் துண்டு

பூண்டு            – பத்து பற்கள்

தயிர்              – 1 குழிக்கரண்டி

எண்ணெய்         – 1 குழிக்கரண்டி

உப்பு              – தேவையான அளவு

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டை விழுதாக அம்மியில் அரைக்கவும். பிறகு ஒரு குக்கரில் சுத்தம் செய்த கறியை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும். தொடர்ந்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி  வேகவைக்கவும்.

 

  1. பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டை அதில் போட்டு வதக்கவும்.

 

  1. வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சத்தூள் மற்றும் கரம்மசாலாவை சேர்த்து வதக்கி பின் தக்காளியை போடவும். தக்காளி குளைந்ததும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும்.

 

  1. மசாலாவில் பச்சை வாசனை போனதும் வேகவைத்த கறியை சேர்க்கவும். கறியை கலந்து அடுப்பை மிதமான தீயில் சிறிது நேரம் வைக்கவும். கலவை நன்றாக கொதித்ததும் அலங்கரிக்க கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும். சுவையான மட்டன் மசாலா தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.