மீ‌ன் மசாலா

மீ‌ன் மசாலா

 

தேவையான பொருட்கள் 

 

மீன்               – 4 துண்டுகள்

வெங்காயம்        – 3 நறுக்கியது

தக்காளி           – 1 நறுக்கியது

இஞ்சி, பூண்டு ‌விழுது     – 2 தேக்கரண்டி

க‌றிவே‌ப்‌பிலை           – ‌சி‌றிதளவு

மல்லி இலை            – ‌சி‌றிதளவு

மிளகாய்த் தூள்          – 1 தேக்கரண்டி

மிளகுத் தூள்            – ½ தேக்கரண்டி

மஞ்சள் தூள்             – ½ தேக்கரண்டி

பட்டை, லவ‌ங்க‌ம் – 1 சிறிதளவு

எண்ணெய் (பொரிக்க)     – தேவையான அளவு

உப்பு              – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். 1 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி உ‌தி‌ர்‌த்து வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள மீன் துண்டுககளை சிறிது மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு ‌விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி நன்றாக ஊற வை‌க்கவு‌ம்.

 

  1. பிறகு வாணலியில் எ‌ண்ணெ‌ய் ‌ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய மீன் துண்டுகளைபோ‌ட்டு பொரித்து எடுக்கவும். அதே வாண‌லி‌யி‌ல் எண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, த‌க்கா‌ளி மற்றும் கொ‌த்து ‌ம‌ல்‌லி போ‌ட்டு நன்றாக வதக்கவும்.

 

  1. வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் போட்டு இதனுடன் மு‌ள் எடு‌த்த ‌மீனை சே‌ர்‌த்து ஐந்து ‌நி‌மிடங்கள் வரை வேக ‌வைக்கவும்.

 

  1. கடைசியாக பொரித்த மீன்களை சேர்த்து லேசாக‌க் ‌கிள‌றி இற‌க்கிவிடவும். சுவையான மீ‌ன் மசாலா சாப்பிட தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.