மீன் மேத்தி மசாலா

methi

 

 

தேவையான பொருட்கள்  :

 

மீன்               – ¼ கிலோ

பெரிய வெங்காயம்       – 1

தக்காளி           – 1

மஞ்சள் தூள்             – ½ தேக்கரண்டி

பூண்டு                  – 5 பல்

மிளகாய் தூள்            – ½ தேக்கரண்டி

வெந்தயம்         – ½ தேக்கரண்டி

எண்ணெய்         – தேவையான அளவு

உப்பு              – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெந்தயத்தை தாளித்து, அரைத்த விழுது, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து , ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது அதில் மீன் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.

 

  1. கிரேவி பதத்திற்கு மசாலா வந்தவுடன் இறக்கி பரிமாறவும். சுவையான மீன் மேத்தி மசாலா தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.