மீன் ரோஸ்ட்

fish

 

 

தேவையான பொருட்கள்: :

மீன்               – 4 துண்டுகள்

மிளகாய் தூள்            – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது     – 1 தேக்கரண்டி

தனியாதூள்        – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்             – ¼ தேக்கரண்டி

எண்ணெய்         – 3 தேக்கரண்டி

உப்பு              – 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு   – ½ தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீனை தவிர மசாலா பொருட்கள் அனைத்தயும் சேர்த்து நன்கு கலக்கவும்.

 

  1. கலந்து வைத்திருக்கும் மசாலாவுடன், மீன் துண்டுகளை நன்கு முன் பின் பிரட்டி இரண்டு மணி நேரம் ஊற விடவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போடவும். மிதமான தீயில் நன்றாக வருத்து எடுக்கவும். சுவையான மீன் ரோஸ்ட்  தயார்.

Leave a Reply

Your email address will not be published.