பாலக் சிக்கன்  

palak chicken

 

தேவையானப் பொருட்கள்:

சிக்கன்                  – 250 கி
பாலக்கீரை         – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது     – 20 கி
பச்சை மிளகாய்          – 4 (நறுக்கியது)
எண்ணெய்         – 1 டேபிள்தேக்கரண்டி
மஞ்சள் தூள்             – 1 தேக்கரண்டி
கரம் மசாலா             – 1 தேக்கரண்டி
உப்பு              – தேவையான அளவு
தக்காளி           – 1 (நறுக்கியது)
கெட்டி தயிர்             – 200 கி
வதக்கி அரைக்க தேவையான பொருட்கள்::

சின்ன வெங்காயம் – 20 (நறுக்கியது)
வரமிளகாய்        – 5
சீரகம்             – 1 தேக்கரண்டி
வெந்தயம்         – ½ தேக்கரண்டி
எள்               – 1 தேக்கரண்டி
மிளகு             – 1 தேக்கரண்டி
மல்லித்தூள்       – 3 டேபிள்தேக்கரண்டி
மஞ்சள்தூள்        – 1 தேக்கரண்டி
தேங்காய் துறுவல் – 2 டேபிள்தேக்கரண்டி
கறிவேப்பிலை           – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

 

  1. சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் இஞ்சி , பூண்டு விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

 

  1. பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் பாலக் கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும். கீரை வதங்கியவுடன் வெட்டி வைத்துள்ள சிக்கன் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும்.

 

  1. வதங்கியதும் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் தக்காளியை சேர்த்து கொஞ்ச நேரம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் கரம் மசாலா, உப்பு சிறிது நீர் ஊற்றி நன்றாக் வேக விடவும். வெ ந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

 

Leave a Reply

Your email address will not be published.