பெப்பர் சிக்கன்

pepper chicken

 

தேவையான பொருட்கள்::

சிக்கன்                  – ½ கிலோ
மிளகு                   – 25 கிராம்
சோம்பு                  – ½ தேக்கரண்டி
கிராம்பு            – 2
எண்ணெய்         – 100 மில்லி
இஞ்சி                   – 10 கிராம்
பூண்டு                  – 10 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தண்ணீர்           – தேவைகேற்ப
உப்பு              – தேவைகேற்ப

செய்முறை விளக்கம்:

 

  1. சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து நீரை நன்கு வடித்து தனியாக வைக்கவும். மிக்ஸியில் மிளகு, சோம்பு, கிராம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நைசாக   அரைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்வும்.

 

  1. பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிவப்பு நிறமாக மாறும் வரை  நன்றாக வதக்கவும்.

 

  1. வெங்க்காயம் நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும். இதனுடன் கழுவிய சிக்கன் துண்டங்களை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

 

  1. சிக்கன் வேகும் அளவிற்கு தேவையான நீர் ஊற்றி 15 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததை உறுதி செய்துக்கொண்டு நீர் வற்றும் வரை குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். சுவையான பெப்பர் சிக்கன் ரெடி.

 

Leave a Reply

Your email address will not be published.