ப்ரான் இன் க்ரீன் சில்லி மசாலா  

ப்ரான் இன் க்ரீன்

 

 

தேவையான பொருட்கள்::

இறால்                  – ½ கிலோ

இஞ்சி, பூண்டு விழுது     – 1 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் – 10

பெரியவெங்காயம்  – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி                 – 1 (அரைத்தது)

பச்சை மிளகாய்          – 8

கறிவேப்பிலை           – 3 கொத்து

கெட்டி தேங்காய்பால்     – ½ கப்

மஞ்சள் தூள்       – ¼ தேக்கரண்டி

எண்ணெய்         – 2 டேபிள்தேக்கரண்டி

உப்பு              – தேவைகேற்ப

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

 

  1. பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை தாளிக்க ஊற்றி அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கி பச்சை வாசனை நீங்கியதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுதை சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியவுடன் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வெந்தவுடன் எண்ணெய்தனியாக பிரியும் இந்நிலையில் இறாலை சேர்த்து கிளறவும் இறால் முக்கால் பாகம் வெந்தவுடன் தேங்காய்பாலை இதில் சேர்க்கவும்.

 

  1. இறால் வெந்து மசாலா கெட்டியானதும் மல்லி தலையை நறுக்கி தூவி இறக்கவும். சுவையான ப்ரான் இன் க்ரீன் சில்லி மசாலா தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.