ஆட்டு ஈரல் கிரேவி

ஆட்டு ஈரல் கிரேவி

 

 

தேவையான பொருட்கள்: :

ஆட்டு ஈரல்        – ¼ கிலோ
பெரிய வெங்காயம்       – 2 (நறுக்கியது)
தக்காளி           – 2 (அரைத்தது)
தனியாத் தூள்            – சிறிதளவு
மிளகாய் தூள்            – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள்             – சிறிதளவு
உப்பு              – தேவைக்கேற்ப
கரம் மசாலா தூள்  – சிறிதளவு
பச்சை மிளகாய்          – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது     – டேபிள் தேக்கரண்டி
எண்ணெய்         – 2 டேபிள் தேக்கரண்டி

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் ஆட்டு ஈரலை கழுவி சுத்தம் செய்யவும். பிறகு அதை சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, வினிகர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

 

  1. பிறகு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்த்து வதக்கவும். பிறகு ஈரலை சேர்த்து ஒரு நிமிடம் வரை  வேகவிடவும். ஈரலுடன் மசாலாக்களை சேர்த்து நன்றாக பிரட்டி இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.

 

  1. கடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி வெந்த பின் இறக்கவும். சுவையான ஆட்டு ஈரல் கிரேவி தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.