ஆட்டுக்கால் சால்னா

ஆட்டுக்கால் சால்னா

 

தேவையான பொருட்கள்: :

ஆட்டுக்கால்       – 4 கால்
வெங்காயம்        – 2 (நறுக்கியது)
தக்காளி           – 2 (நறுக்கியது)
மல்லித்தூள்       – 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி           – ¼ தேக்கரண்டி
சில்லி பவுடர்            – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது     – 2 தேக்கரண்டி
கரம் மசாலா             – ¼ தேக்கரண்டி
எண்ணெய்         – 2 டேபிள்தேக்கரண்டி
மல்லிக்கீரை             – சிறிது (நறுக்கியது)

கறிவேப்பிலை           – சிறிது (நறுக்கியது)
பச்சை மிளகாய்          – 2
தேங்காய் துருவல் – 4 டேபிள்தேக்கரண்டி
முந்திரி பருப்பு           – 8
மைதா                  – 2 டேபிள்தேக்கரண்டி
மிளகுத்தூள்       – 1 தேக்கரண்டி
சீரகத்தூள்         – 1 தேக்கரண்டி
உப்பு              – தேவைக்கு


செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் ஆட்டு எலும்பை கழுவி நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் மைதாமாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

 

  1. பிறகு ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் ஆகியவைகளை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்க்கவும். பின் ஆட்டு கால் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

 

  1. ஒரு கொதி வந்த பிறகு குக்கரை மூடி விடவும்.  குக்கர் 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். பின்பு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஆட்டுக்கால் இளங்காலாக இருந்தால் அரைமணி நேரமும் சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரமும் கூடுதலாக வேக வைக்கவும்.

 

  1. கால் நன்றாக வெந்ததும்,  அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, முந்திரிபருப்பு கலவையை சேர்க்கவும்.  கால் மணி நேரம் மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.

 

  1. பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை பொன்னிறமாக வதக்கவும்.சுவையான ஆட்டுக்கால் சால்னா தயார்.

Leave a Reply

Your email address will not be published.