இஞ்சி சிக்கன் ஸ்ட்டூ  

stew

 

தேவையான பொருட்கள்: :

சிக்கன்            – 250 கி
மிளகாய்     – 3 (கீறியது)
மஞ்சத்தூள்  – ¼ தேக்கரண்டி
இஞ்சி       – 25 கி (துருவியது)
பட்டை            – 1
கிராம்பு      – 3
ஏலக்காய்   – 3
பிரிஞ்சி இலை     – 2
சீரகத்தூள்  – ½ தேக்கரண்டி
மிளகுத்தூள்        – 1 தேக்கரண்டி
தேங்காய் பால்     – 150 மி.லி
வெண்ணெய்       – 1 டேபிள்தேக்கரண்டி
கொத்தமல்லி      – 1 கட்டு

உப்பு              – ½ தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:

 

  1. கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கடாயில் கோழிக்கறியை போட்டு அதில் அரை தேக்கரண்டி உப்புத்தூள், இஞ்சி, மஞ்சள்த்தூள்,  பாதி தேங்காய் பால் ஊற்றி மற்றும் பச்சை மிளகாயை  சேர்த்து  மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

 

  1. வேகவைத்த சிக்கன் கலவையில் மீதம் வைத்திருந்த தேங்காய் பால், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லியை தூவி கொதிக்கவைத்து இறக்கவும்.

 

  1. பிறகு ஒரு வாணலியில் வெண்ணெயை போட்டு அதனுடன்  வெங்காயம், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவையை சிக்கனுடன் சேர்க்கவும். சுவையான இஞ்சி சிக்கன் ஸ்ட்டூ சாப்பிட  தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.