ஈஸி சிக்கன் குருமா

koli kumaa

 

 

தேவையான பொருட்கள்: :

சிக்கன்                        – ½ கிலோ
வெங்காயம்                    – 1
தேங்காய்ப்பால்                 – 1 கப்
பச்சைமிளகாய்                 – 2
தக்காளி                 – 1
கறிவேப்பிலை                 – 10 இலை
இஞ்சி, பூண்டு விழுது           – 1 தேக்கரண்டி
ரெடிமேட் சிக்கன் மசாலா – 25 கிராம்
எண்ணெய்               – 1 டேபிள்கரண்டி
உப்பு                    – 2 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் சிக்கனை கழுவி நன்றாக சுத்தம் செய்யவும். சிக்கனுடன் தேங்காய்ப்பால், ½ தேக்கரண்டி உப்பு மற்றும் ரெடிமேட் சிக்கன் மசாலாவை இதனுடன் கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் குளிர வைக்கவும்.

 

  1. வெங்காயம் பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதி;ல் வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். மேலும் தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் பிரிட்ஜில் இருக்கும் சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.

 

  1. ஐந்து நிமிடம் வதக்கிவிட்டு உப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு சிக்கனை வேகவைக்கவும். சிக்கன் வெந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான ஈஸி சிக்கன் குருமா தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.