இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

human-heart-facts
  1. அளவான உணவு எப்போதும் சாப்பிடுங்கள். நன்றாக பசி எடுக்கும் போது சாப்பிடுங்கள்.
  2. சாப்பிடாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில சமயங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் கெடுதலை விளைவிக்கும்.
  3. உடல் எடையை குறைப்பதற்கு சரியான உடற்பயிற்சியின் மூலம்தான் அடைய முடியும். ஆகையால் உடற்பயிற்சி அவசியமாகிறது.
  4. நீங்கள் விரும்பும் உணவை குறைவாக, அவ்வப்போது சாப்பிடுங்கள். எந்த உணவையும் முழுமையாக தவிர்க்க வேண்டியதில்லை.
  5. மீனில் அமிலச் சத்து இருக்கிறது. மீன் சாப்பிடுவது நம் இதயத்திற்கு பயனைத் தரும்.
  6. புதியதாக உள்ள காய் மற்றும் பழங்கள் தினந்தோறும் சாப்பிடுங்கள். பிரிட்ஜில் வைக்கப்படும் காய்-பழங்கள் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை சத்துக்களை இழக்கின்றன.
  7. புதியதாக உள்ள காய் மற்றும் பழங்கள் தினந்தோறும் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
  8. பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்.
  9. சிகரெட் பிடிப்பதும், பருமனாக இருப்பதும் இதயத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கும்.
  10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை நீங்கள் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
  11. அழுத்தம் (Tension) இல்லாமல் அமைதியாக சாப்பிடுங்கள்.
  12. பயனில்லாத மிகச் சிறிய விஷயங்களால் தான் பெரும்பாலும் ( 90 சதவீதம் ) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.
  13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
  14. எல்லா விஷயங்களும் மிகச் சரியாக (Perfect) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் Perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்
  15. சில வேலைகளை மற்றவர்களிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் (Delegate)
  16. கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளியே கொட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன்மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.
  17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்!
  18. மழைக்காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
  19. உங்கள் படுக்கை அறையில் டி.வி., கம்ப்யூட்டர், செல்லப்பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.
  20. உடல் பருமன் ஆவதற்கு டி.வி. ஒரு முக்கிய காரணம் ஆகும்
  21. உங்கள் செல்போனை உங்கள் பார்ட்னர் ஆக்கிக் கொள்ளாதீர்கள். அது கெட்ட பழக்கம். மேலும் மனச் சுமையைத் தான் கூட்டும்.
  22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களுக்கு இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.
  23. சிரிப்பு (Laugh therapy): புற்று நோய், இதய நோய், மன பாரம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது.
  24. தவறு செய்தால் அதனை ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் தன்னம்பிக்கையை அது அதிகப்படுத்தும்.
  25. உங்கள் பிரச்சினைகளை முடிந்தவரை பேசி தீர்க்க பாருங்கள்.
  26. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் (Optimist) என்று நம்புங்கள்.
  27. மகிழ்ச்சியாக வாழும் கணவன்-மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனித்து வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
  28. நம்பிக்கையும் நேர்மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுவிக்க உதவுகிறது.
  29. வருடத்திற்கு ஒரு தடவையாவது உடல்நல பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது மிகவும் அவசியம்.
  30. பழைய நட்புகளை விடாதீர்கள், தொடருங்கள். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதிகமான நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல்நலனும் நன்றாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published.