கொட்ரா கோழி குருமா

cashew

 

 

தேவையான பொருட்கள்: :

கோழி                   – 1  கிலோ
பெரிய வெங்காயம்       – 3
தக்காளி           – 4
இஞ்சி பூண்டு விழுது     – 4 தேக்கரண்டி
மல்லிதலை        – சிறிது
கரம் மசாலா             – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்          – 4

அரைக்க தேவையான பொருட்கள்: :

மிளகு, சீரகம்            – தலா 1 தேக்கரண்டி
பட்டை                  – சிறிய துண்டு
சோம்பு                  – ¼ தேக்கரண்டி
தேங்காய்          – ½ மூடி
முந்திரி                 – 10
ஏலக்காய்          – 3
உப்பு, எண்ணெய்   – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம் :

 

  1. கோழியை நன்றாக சுத்தம் செய்யவும். அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிரமாகும் வரை வதக்கவும்.

 

  1. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மல்லி இலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் வதக்கவும். சுத்தம் செய்த கோழியை இதனுடன் சேர்த்து ஒரு தடவை பிரட்டி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூள் சேர்த்து கிளறிவிடவும்.

 

  1. பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கோழி பாதியாக வெந்ததும் அரைத்த கலவையை இதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும். சிறிது நேரம் நன்றாக  வேக விடவும். அல்ங்கரிக்க  மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கொட்ரா கோழி குருமா தொட்டுக்கொள்ள  தயார்.

Leave a Reply

Your email address will not be published.