கோழி குருமா

koli kumaa

 

 

 

தேவையான பொருட்கள்: :

கோழி                   – ½  கிலோ
மஞ்சள் தூள்       – ½ தேக்கரண்டி
தக்காளி           – 1 கப் நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 கப்
உப்பு                    – தேவையான அளவு

தாளிக்க  தேவையான பொருட்கள்: :

சோம்பு            –  ¼ தேக்கரண்டி
பட்டை, கிராம்பு    – சிறிதளவு
ஏலக்காய்          –  2
கறிவேப்பிலை           –  தேவையான அளவு
எண்ணெய்               –  தேவையான அளவு

அரைக்க  தேவையான பொருட்கள்: :

சோம்பு      –  ¼ தேக்கரண்டி
தேங்காய்   –  ½ கப்
இஞ்சி       –  ½
பச்சை மிளகாய்    –  4
பூண்டு       –  4
கசகசா      –  ¼ தேக்கரண்டி
முந்திரி பருப்பு     –  5
கிராம்பு      –  2

செய்முறை விளக்கம் :

 

  1. கோழியை நன்றாக சுத்தம் செய்யவும். அரைக்கவேண்டியவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். இதனை தண்ணீர் விட்டு மிக்ஸ்சியில் அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

 

  1. பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை கடாயில் போட்டு பொன்னிரமாக வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய தக்காளி, அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

 

  1. கோழிக்கறியை இரண்டு டம்லர் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும். அலங்கரிக்க மல்லித் தலை தூவி இறக்கவும். சுவையான கோழி குருமா தயார்.

Leave a Reply

Your email address will not be published.