சிக்கன் கேப்ஸிகம் கிரேவி

chicken capcicam gravy

 

தேவையான பொருட்கள்:

 

சிக்கன்            – ¼ கிலோ
குடமிளகாய்       – 5
தக்காளி           – 3
வெங்காயம்        – கால் பாதி(பெரியது)
சோம்புத்தூள்             – ½ மேசைக்கரண்டி
சீரகத்தூள்        – சிறிது
கருவா                  – ஒரு துண்டு
ஏலம்             – 2
கொத்தமல்லி இலை      – சிறிது
இஞ்சி விழுது            – 1 தேக்கரண்டி
பூண்டு விழுது           – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்        – தேவையான அளவு
வத்தல் தூள்       – 3 மேசைக்கரண்டி
எண்ணெய்         – தாளிப்புக்கு
உப்பு              – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் கறியை சுத்தம் செய்யவும். பிறகு பாத்திரத்தில் கறியை போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், ½ மேசைக்கரண்டி வத்தல் தூள், ½ தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1½ மேசைக்கரண்டி மற்றும் சோம்புத்தூள் சேர்த்து நன்கு பிரட்டவும். தக்காளி, வெங்காயம் மற்றும் குடமிளகாயை நறுக்கவும்.

 

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் கருவா, ஏலம் போட்டு தாளிக்கவும். தொடர்ந்து வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும். பின் நறுக்கிவைத்த குடமிளகாயை போட்டு வதங்கிய பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

 

  1. பிறகு மீதி உள்ள மற்ற தூளையும் சேர்த்து, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பிரட்டிவைத்த கறிகலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். கலவை மேல் தண்ணீர் தெளித்து மூடிபோட்டு வேகவிடவும்.

 

  1. கறி நன்கு வெந்து கிரேவி போல் ஆகும் வரை காத்திருக்கவும். அலங்கரிக்க கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான சிக்கன் கேப்ஸிகம் கிரேவி தயார்.

Leave a Reply

Your email address will not be published.