முந்திரி சிக்க‌ன் குருமா

cashew

தேவையான பொருட்கள்:

கோழிக்க‌றி             – 1 கிலோ
வெங்காய‌ம்             – 4
த‌க்காளி                 – 4
க‌ருவேப்பிலை           – சிறிதளவு
ம‌ல்லித்த‌லை            – 1 கைப்பிடி
ப‌ச்சைமிள‌காய்           – 4
தேங்காய் துருவ‌ல்       – 1½ க‌ப்
எலுமிச்ச‌ம்ப‌ழ‌ம்          – 1
இஞ்சி, பூன்டு விழுது     – 1 தேக்கரண்டி
ஏல‌க்காய்                – 3
சோம்பு                  – 1 தேக்க‌ர‌ண்டி
வ‌த்த‌ல் தூள்             – 2 தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள்             – ½  தேக்கரண்டி
முந்திரிப்ப‌ருப்பு           – 50 கிராம்
ம‌ல்லித்தூள்             – 2 தேக்கரண்டி
ப‌ட்டை                  – 1
ல‌வ‌ங்க‌ம்                – 2
உப்பு                    – தேவையான‌ அளவு

செய்முறை விளக்கம்:

 

  1. முத‌லி‌ல் கோழிக்க‌றியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு கோழிக்க‌றியை துண்டு துண்டா நறுக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவ‌ல், மிள‌காய் மற்றும் சோம்பை அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். காய்ந்ததும் ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம் மற்றும் ஏல‌க்காயை போடவும்.

 

  1. பிறகு நறுக்கிய வெங்காய‌ம், ப‌ச்சைமிள‌காய் , த‌க்காளி, இஞ்சி, பூண்டு விழுது இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். வ‌த்த‌ல் தூள், ம‌ல்லித்தூள், ம‌ஞ்ச‌ள் பொடியையும் சேர்த்து வதக்கவும்.

 

  1. வதக்கலுடன் சேர்த்து கோழிக்க‌றியை கடாயில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். கறியுடன் அரைத்த தேங்காய் க‌ல‌வை, முந்திரி, க‌ருவேப்பிலை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
    பிறகு த‌ண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க‌ விடவும்.

 

  1. கடைசியாக குருமாவில் எலுமிச்ச‌ம் ப‌ழ‌ச்சாறு பிளிந்து அதனுடன் ம‌ல்லித்த‌லையை ந‌றுக்கித் தூவி இறக்கி பரிமாறவும். சுவையான முந்திரி சிக்க‌ன் குருமா தயார்.

Leave a Reply

Your email address will not be published.