சைவ உணவுக்காரர்களா இதப்படிங்க!

blood maker

 

உடலில் உள்ள அடிப்படை கட்டிட தொகுதிகளில் புரதமும் ஒன்றாகும்.  புரதம் உடலின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகும்.  வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானதாகும்.

1 முதல் மூன்று வயதை கொண்ட குழந்தைகள் தினமும் 13 கி. புரதமும்                 4 முதல் 8 வயதை கொண்ட குழந்தைகள் அன்றாடம் 19 கி. புரதமும்                     9 முதல் 13 வயதை கொண்ட குழந்தைகள் தினந்தோறும் 34 கி. புரதமும்                         14 முதல் 18 வயதை கொண்ட மாணவிகள் தினமும் 46 கி. புரதமும்                                 14 முதல் 18 வயதை கொண்ட இளைஞர்கள் 52 கி. புரதமும் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

ஒருவர் சைவ உணவை சாப்பிட்டு வந்தால் தினசரி புரத தேவைப்பாடு கிடைக்கும் வகையில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும். இங்கு சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான சில புரதம் நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 • பட்டாணி

ஒரு கப்—16 கிராம் அளவு.  பட்டாணிகளில் புரதமும் நார்ச்சத்தும் அடங்கியுள்ளது.  வயிற்று புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.  பட்டாணியை வேக வைத்து குழம்பில் சேர்த்து சமைப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.  இது உடலில் வைட்டமின்கள் கனிமங்கள் மற்றும் புரதத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

 • ஓட்ஸ்

சமைக்கப்பட்ட ஒரு கப்—6 கிராம்.  சிறந்த காலை உணவு ஓட்ஸ் கஞ்சி.  இதை பழங்களுடன் கிச்சடியாக அல்லது தானியமாக அல்லது ஓட்ஸ் தோசையாகவும் கூட சாப்பிடலாம்.

 • சாதம்

அற்புதமான இந்த பழமை வாய்ந்த உணவில் முழுமையான அளவில் புரதம் கிடைக்கிறது.  அதிலும் 42 கிராம் புரதம் ஒரு கப் சாதத்தில் இருக்கிறது.  இந்திய உணவு வகைகளில் பிரதான உணவாக கருதப்படுகிறது.

 • பருப்பு வகைகள்

சமைக்கப்பட்ட ஒரு கப்—18 கிராம்.  பெரும்பாலான இந்திய உணவுகளில் தினந்தோறும் செய்யும் சமையலுக்கு உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகள் சேர்க்கப்படுவது இயல்பான ஒன்றாகும்.  இந்த மரபுகளை விட்டு  விட வேண்டாம்

 • நட்ஸ்.

நட்ஸ்களான பிஸ்தா, பாதாம், முந்திரி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.  உணவில் சேர்க்கப்படுவதற்கு சிறந்த வழியாக அமைகிறது.  முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து நட்ஸ்களை உபயோகப்படுத்தினால் உகந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.  உதாரணமாக 10 பாதாமில் 25 கிராம் புரதம் உள்ளது.

 • பீன்ஸ் வகைகள்.

கொண்டைக் கடலை ( சமைக்கப்பட்ட கப்பில் 15 கிராம் ) தட்டப்பயிறு போன்றவைகளை நாம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் மிகப்பெரிய புரத அளவு கிடைக்கும்.  அவற்றை அவித்து கேரட், வெள்ளரி மற்றும் கொத்தமல்லி சேர்த்து ருசிமிக்க பீன்ஸ் சாலட் செய்து சாப்பிடலாம்.  இவை அனைத்தையும் குக்கரி்ல் போட்டு பீன்ஸ் சூப் செய்து குடிக்கலாம்.

 • விதைகள்

ஒவ்வொறு ¼ கப்பிலும் புரதத்தின் அளவு – பூசணி விதைகள் 9 கிராம், எள் 6 கிராம், சூரியகாந்தி 8 கிராம்.  அதிலும் 100 கிராம் ஆளி விதையில் 18 கிராம் புரதம் உள்ளது.  உங்கள் உணவுகளில் இந்த விதையை தூவி விட்டால் உங்கள் உணவில் புரதத்தின் அளவு மேம்படும்.

 • ராகி

ராகி கால்சியம், புரதம்,இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள்  அடங்கிய சத்துள்ள உணவாக விளங்குகிறது.  ராகியை அப்படியே சாப்பிடுவது குழந்தைகளுக்கு கடினமாக இருக்கும்.  அதனால் ரொட்டி மாவு,, தோசை மாவு போன்றவைகளுடன் ராகி மாவை கலக்கலாம்.  இதனால் ஊட்டச்சத்து அளவு அதிகரிக்கிறது.

 • பன்னீர்

100 கிராமில் 11 கிராம் புரதம் உள்ளது.  பன்னீர் நம் உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்று.  இதனை பிரதான உணவு, சாலட் மற்றும் டெசர்ட் என அனைத்திலும் உபயோகப்படுத்தலாம்.  இவற்றில் புரதம் வலிமையாக உள்ளது.  இது பால் பொருட்கள் என்பதால் புரோட்டீன் அதிகம் இருக்கிறது.

 • வேர்க்கடலை வெண்ணெய்

ஒரு டீஸ்பூன்—7.5 கி. இந்திய உணவிற்கு புது வரவான இதில் புரதம் வளமையாக உள்ளது.  இதனை சாண்ட்விச் போன்றவைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

 • முழு கோதுமை பிரட்

இரண்டு துண்டுகளில் 5.2 கிராம்.  முழு கோதுமை பிரட்டில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் வளமையான அளவில் உள்ளது.

 • கீரை

ஒரு கப் – 13 கி. கீரை எளிமையான ஒன்று.  சக்தி வாய்ந்தது.  கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டால் வைட்டமின், கனிமம், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும்

One Response to சைவ உணவுக்காரர்களா இதப்படிங்க!

 1. owpxpk says:

  fYP1bU mtznhqeswxlv, [url=http://sattgpynhlnw.com/]sattgpynhlnw[/url], [link=http://rmbwgzosyffd.com/]rmbwgzosyffd[/link], http://painnuwvkiln.com/

Leave a Reply

Your email address will not be published.