மூன்றே நாட்களில் எடை குறைய

workouts

 

தடிமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க வழி இருந்தால் சொல்லுங்கள் என்று புலம்புவதை கேட்டிருப்பீர்கள்.  அதுமட்டுமில்லாமல் அவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இருப்பார்கள்.  இருந்தாலும் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும் ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?  பொதுவாக உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான வழியை நாடினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  குறிப்பாக ஒரு நாளைக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்கள் உடலுக்கு கிடைக்க வேண்டும்.  டயட்டே நம் உயிருக்கு உலை வைத்து விடும் பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா, அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க.  இங்கே கொடுக்கப்பட்டுள்ள டயட்டை பின்பற்றுங்கள்.  முன்றே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம;

3 நாட்களில் எடையை குறைப்பதற்கான டயட் மெனு

  • காலை உணவு

காலை உணவாக ஒரு கப் குறைவான கொழுப்புள்ள தயிர் அல்லது ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுங்கள்.

  • ஸ்நாக்ஸ்

ஒரு டம்ளர் காய்கறிசாறு அல்லது பழச்சாறு குடிக்கலாம்.  இரண்டு பழங்கள் அல்லது காய்கறியை சாப்பிடலாம்.

  • மதிய உணவு

மதிய வேளையில் உணவாக ஒரு கப் காய்கறி சாலட் சாப்பிடலாம் மற்றும் ஒரு டம்ளர் பழச்சாறு குடிக்கலாம்.

  • இரவு உணவு

க்ரனோலா பார் என்பது நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், உலர்ந்த பழங்கள், தேன் மற்றும் நட்ஸ் கொண்டு செய்யப்பட்ட தின்பண்டம்,.  இதை இரவு நேரத்தில்  1 1/2 கப் சாப்பிடலாம்.  நட்ஸ், பழங்கள் மற்றும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

  • குறிப்பு

மேற்கூறியவாறு டயட்டை தொடர்ந்து மூன்று நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.  நான்காம் நாள் எப்போதும் போல் உணவை சாப்பிடலாம்.  ஆனால் இறைச்சிகள், சீஸ் இருக்கும் உணவுகள் மீன், சிக்கன் போன்றவற்றை உடனே சேர்க்காதீர்கள்.  சில நாட்கள் கழித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.  குறிப்பாக நான்காம் நாளிலிருந்து சில நாட்கள் சைவ உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.  இதனால் இன்னும் அதிகமான பலன்கள் கிடைக்கும்.

  • எத்தனை முறை பின்பற்றலாம்

இந்த டயட் மெனுவை படித்த பிறகு, பலருக்கும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பின்பற்றலாம்?  என்ற கேள்வி எழும்.  இந்த 3 நாட்கள் டயட்டை ஒருமுறை பின்பற்றி, மறுமுறை பின்பற்ற ஒரு வார இடைவெளி வேண்டும்.

  • தண்ணீர் அவசியம்

என்னதான் டயட்டை பின்பற்றினாலும் குடிக்கும் தண்ணீரின் அளவை மட்டும் குறைத்தல் கூடாது.  ஏனென்றால் தண்ணீர் தான் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்ளகளை வெளியேற்ற பெரிதும் உதவி செய்கிறது.

 

 

 

One Response to மூன்றே நாட்களில் எடை குறைய

  1. அம்மு says:

    நல்ல முயற்சி

Leave a Reply

Your email address will not be published.