மட்டனின் நன்மைகள்

cholestral

மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது.  அசைவ உணவுகளிலே.  அதிக மக்களால் சாப்பிடப்படும் அசைவப் பொருள் மட்டன்தான்.  மட்டன் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல கோளாறுகளை குணப்படுத்தலாம்.  குறிப்பாக விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்கள், கருத்தரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் சிக்கனை தவிர்த்து மட்டனை சாப்பிடுவதே நல்லது..  ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி.12, ஈ, கே. போன்றவைகள் நிறைந்துள்ளன.  புரோட்டீன், கோலைன், அமினோ அமிலங்கள், நல்ல கொழுப்புக்கள், கனிமச் சத்துக்களான கால்சியம், மாங்கனீசு, ஜிங்க், இரும்பு சத்து, பாஸ்பரஸ், செலினியம், காப்பர் போன்றவைகள் அடங்கியுள்ளன.  எலக்ட்ரோலைட்டுகளாக பொட்டாசியம், சோடியம் போன்றவையும், -ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.  மட்டனில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதென்றால், அதனை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.

மட்டன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

 • இதயம் வலிமை பெறும்

மட்டன் இதயத்தை பலம் பெறச் செய்யும்.  ஏனென்றால் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது.  இதனால் இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

 • . கொலஸ்ட்ரால் அளவுகள்

மட்டனில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன.  ஆகவே மட்டனை சாபிபட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

 • எடையைக் குறைக்கும்

வேகமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர் மட்டனை சாப்பிடுவது நல்லது.  ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன் பசியை கட்டுப்படுத்துகிறது.  நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது.  மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால் இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

 • கர்ப்பிணிகளுக்கு நல்லது.

பெண்களுக்கு இரத்த சோகை கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  எனவே கருவுற்ற தாய்மார்கள் மட்டனை சாப்பிட்டால் அதில் உள்ள இரும்பு சத்து ஹீமோ குளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.  குறிப்பாக, கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழி வகுக்கும்.

 • புற்று நோயைத் தடுக்கும்.

மட்டன் சாப்பிட்டால் அதில் உள்ள செலினியம், பி வைட்டமின்கள் மற்றும் கோலைன் போன்றவை எந்த வகையான புற்று நோயும் தாக்காமல் உடலை பாதுகாக்கும்.  ஆட்டிறைச்சி டோர்பிடோ மற்றும் பித்த நீரைக் கொண்டிருக்கிறது.  இவை ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள சரி செய்கிறது.  மேலும் ஆண்கள் மட்டன் அதிகம் சாப்பிட்டால் அவர்களின் உடல் பலம் பெறும்.

 • மாதவிடாய் வலி

மட்டனில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.  உது உடலில் நல்ல இரத்தத்தை மேம்படுத்துகிறது.  உள்காயங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.  பெண்கள் மட்டனை அதிகம் சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வலியைத் தடுக்கலாம்.

 • நீரிழிவை குணப்படுத்தும்

மட்டனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள சத்துக்கள் நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கும்.  குறிப்பாக டைப் 2 நீரிழிவு ஏற்படுவதை மட்டன் உடகொள்வதன்மூலம் தடுக்கலாம்.

 • மெட்டபாலிசம் அதிகரிக்கும்

நியாசின் என்னும் வைட்டமின் ஆட்டிறைச்சியில் உள்ளது.  இது உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரித்து ஆற்றலை மேம்படுத்துகிறது.

 • நோய் எதிப்பு சக்தி அதிகமாகும்.

மட்டனில் இருக்கும் கனிமச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.  அதிலும் வாரத்தில் இரண்டு முறை மட்டன் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் நல்ல மாற்நம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணரலாம்.

 • மூளைக்கு நல்லது

சிக்கனை விட மட்டன் அதிகம் கொடுத்து வந்தால் படிக்கும் குழந்தைகளுக்கு மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.  இதனால் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக இருப்பார்கள்.

 • மன அழுத்தம் நீங்கும்

நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் இருக்கும் பொழுது, மட்டனை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் நீங்கி நல்ல மன நிலையை உணர முடியும்.

Leave a Reply

Your email address will not be published.