கோக் குடிப்பதால் ஏற்படுவது

coke cola

 

தற்போதைய நவ நாகரீக வாழ்க்கை முறையில் விருந்தினரை உபசரிக்க நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் குளிர்பானம்.  பார்ட்டிகள் செழிக்க, உண்ட உணவு செரிக்க என எங்கும் எதற்கெடுத்தாலும் கோக் மயம் தான்.  கொக்கோ கோலா உலக தாகத்தை மட்டும் தான் அடக்குகிறது என்று நினைக்கிறீர்களா,?  ஒவ்வோரு நாட்டின் பொருளாதாரத்தை வைத்து அதற்கேற்ற திறனில்தான் கோக் தயாரிக்கப்படுகிறது என்ற தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இப்பொழுது இன்னுமொரு அதிர்ச்சியூட்டும் தகவலும் வந்திருக்கிறது.  அதாவது கோக் குடித்த ஒரு மணி நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.  ரெட் புல், மான்ஸ்டர் போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸில் காளைமாட்டின் விந்தணு கலப்புள்ளதா!? அதிர்ச்சி.  கோக் குடித்தவுடன் நிமிடத்திற்கு நிமிடம் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது அதில் இருக்கும் சர்க்கரையின் அளவுதான்.  இனி கோக் குடித்து ஒரு மணி நேரத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

10 நிமிடங்களில்

ஒரு கோக் டின் பேக் குடித்த முதல் பத்து நிமிடத்தில் அதில் இருக்கும் சர்க்கரையின் அளவு உங்கள் உடல் இயக்கத்தைத் தாக்குகின்றன.  இதில் இருக்கும் பத்து டீஸ்பூன் சர்க்கரை அளவு நீங்கள் ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டியது ஆகும்.  ஆனால் நீங்கள் பத்து நிமிடத்தில் பருகி விட்டு செல்கிறீர்கள்.

20 நிமிடங்களில்

உங்களின் இரத்த சர்க்கரை அளவு அட்டகாசமாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.  உங்கள் கல்லீரல் இதை எதிர்த்து பதிலுக்கு போராடும் பொழுது அந்த சர்க்கரை கொழுப்பாக மாறுகிறது அதுவும் ஒரு சில நிமிடங்களில்.

40 நிமிடங்களில்

உங்கள் உடலினுள் காப்பைஃன் அளவு முழுவதுமாக உறிஞ்சப்பட்டிருக்கும்.  கோக் குடிக்கும் முன்னர் இருந்த அளவை விட உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்..  கல்லீரலின் எதிர் தாக்கத்தினால் மேலும் மூளை சற்று மந்தமாக செயல்பட ஆரம்பிக்கும்.

45 நிமிடங்களில்

டோபமைன் (Dopamine) அளவு உங்கள் உடலி்ல் மேலோங்கியிருக்கும்.  இதனால் உங்கள் மூளை சற்று வித்தியாசமான நிலையில் இயங்க ஆரம்பிக்கும்.  இதன் செயல்பாடு ஹெராயின் செயல்பாட்டினைப் பொன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.

60 நிமிடங்களில்

உங்கள் சிறுகுடலில் பாஸ்பரிக் அமிலம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் ஜிங்கை இணைக்கிறது.  இதனால் உங்கள் வளர்சிதை மாற்றம் மிகுதியாக தூண்டப்படுகிறது.  காப்ஃபைனின் நீர் பெருக்க பண்புகள் உங்களை சிறுநீர் கழிக்க தூண்டும் .

பற்களில் பாதிப்பு

பற்களின் மேல் இருக்கும் கோட்டிங் சிறுக, சிறுக சிதைவு ஏற்பட்டு பற் சிதைவு ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.  பெரும்பாலும் எல்லா குளிர்பானங்களும் இந்த பாதிப்புகளுக்கு காரணியாக இருக்கிறது.

பாக்டீரியா தாக்கம்

குளிர் பானங்கள் குடிக்கும் பொழுது நமது வாயில் 20 நொடிகளளில் உருவாகும் பாக்டீரியாக்கள் 30 நிமிடங்கள் வரை சுறுசுறுப்பாக செயல்படுதிறதாம்.  இதே நீங்கள் முப்பது நிமிடம் மெதுவாக அல்லது தொடர்ந்து குடிக்கும் பொழுது இதன் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கிறது.

பி.பி.சி.யின் ஆவணப்படம்

பி.பி.சி.யின் ஆவணப்படம் ஒன்றில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.  இவ்வாறான முறையில் உடலுக்குள் செல்லும் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவுதான் மக்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.