சைனஸ் பிரச்சினைகள்

sinas

 

ஏறக்குறைய 40 மில்லியன் அமெரிக்கர்கள் கைனஸ் நோய் தொற்று அல்லது புரையழற்சியால் ஒவ்வொரு ஆண்டும் துன்பப்படுகின்றனர்.  புரையழற்சி என்பது திசு வரிசையில் ஏற்படும் வீக்கம் அல்லது ஒரு தொற்று ஆகும்.  இது தொற்றை ஏற்படுத்தி சளி உருவாக்கம் அல்லது வலியை உண்டாக்கும்.  பொதுவாக கண்களுக்கு கீழுள்ள பகுதி (Sinuses) காற்றால் நிரப்பப்பட்டிருக்கும்.  ஆனால் அப்பகுதியானது திரவங்கள் மற்றும் கிருமிகளால் ( வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை) நிரப்பப்படும் போது, அதுதொற்றை விளைவிக்கும்.  ஒவ்வாமை, சுவாசத் தொற்று மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியவை சைனஸ் ஏற்பட காரணங்கள் ஆகும்.  ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில கை வைத்தியங்கள்.  இப்போது சைனஸ் உள்ளவர்கள் அதனை சரி செய்ய சாப்பிடவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்.

  • நீர்

உடலிலுள்ள வைரஸ்களை வெளியேற்ற போதிய தண்ணீர் வேண்டும் என்பது அவசியம்.  அன்றாடம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு எட்டு அவுன்ஸ் தண்ணீர் குடிக்கவும்.

  • ஆட்டுக்கால் சூப்

சுவாச அமைப்பு மற்றும் நாசி துவாரங்கள் ஆகியவற்றை ஒரு நிலைப்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவுகிறது.  இது ஒரு வழக்கமான ஒரு தீர்வு ஆகும்.

  • இஞ்சி

இஞ்சி டீ தயாரித்து அதில் தேன் சேர்த்து குடித்தால் சைனஸ் இருப்பவர்கள் குணம் அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • பூண்டு மற்றும் வெங்காயம்

வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கிறது.

  • வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பு ஊக்கப்படுத்தப்பட்டு புரையழற்சி சீக்கிரம் குணமாக உதவுகிறது.

  • சர்க்கரை

சர்க்கரை தொற்றுடன் போராட உதவுகிறது.  வெள்ளை இரத்த அணுக்களை குறைக்கிறது.

  • பழச்சாறு

வைட்டமின் சி ஆரஞ்சு ஜுிசில் இருக்கிறது.  இருந்தாலும் கூட, பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ளது போன்ற முழுமையான ஆற்றல் இருப்பதில்லை. எனவே ஜுஸ்

குடிப்பதை தவிர்ப்பது நல்லது..

  • பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள் சளியை ஏற்படுத்துகிறது.  எனவே இவற்றை தவிர்த்தல் நலம்.

  • சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் தானியங்கள்

தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவை சைனஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.  ஏனென்றால் இவை அதிக சளியை உருவாக்கும்.

  • உப்பு

போதிய தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது உப்பு உடலை வறட்சி அடையச் செய்து சைனஸ் பிரச்சனையை குணமாக்க இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published.