தன்னம்பிக்கை வளர

self confidence

மனிதனுக்கு இரு கைகளை விட முக்கியமானது தன்னம்பிக்கை.  யானைக்கு பலம் தும்பிக்கை.  மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்ற வார்த்தையை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.  மறந்தால் புமியில் நிலைத்து வாழ முடியாது.  ஆகவே அந்த தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நீங்க்ள் பின்பற்ற வேண்டிய பயிற்சிகளையும் சிறந்த வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…..

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சிறந்த 10 வழிகள்.

  • உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த விஷயங்களில் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறீர்களோ அந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்படுங்கள். நீங்கள் அடைந்த வெற்றி, தோல்வி குறித்து பகுத்தாய்ந்து பாருங்கள்.  நீங்கள் எந்த திசையில் பயணம் செல்ல வேண்டும் என்றும், உங்களுடைய பலம் எது என்பதையும் வெளிகாட்டும்.

  • உங்கள் பலவீனத்தை அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் எந்த காரியங்களில் பலமற்றவர்களாக இருக்கிறீர்கள் என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.  உங்களுடைய முயற்சியில் நடந்த செயல்பாடுகளை வெற்றி, தோல்வி குறித்து பகுத்தாய்ந்து பாருங்கள்.  நீ்ங்கள் போகும் பாதையில் செல்லும் வழியில் எப்படி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை உங்களுடைய பலவீனம் வெளிப்படுத்தி விடும்.

  • வெற்றியை கண்காணிப்பு செய்யுங்கள்

நீங்கள் செய்யும் வேலைகளில் எவை எவை உங்களுக்கு நேர்மறை வெளிப் பாடுகளையும் எதிர்மறை வெளிப்பாடுகளையும் தருகின்றன என்று கண்காணிப்பு செய்ய வேண்டியது கட்டாயம்.  யார் நன்மை செய்கிறார்கள் என்பதை பற்றியும் யார் தீமை செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவர்களை கண்காணித்து வாருங்கள்.  இந்த கண்காணிப்பை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள்.

  • புதிய நபர்களுடன் பேசுங்கள்

உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உங்கள் தொழில் சார்ந்தவர்களிடமும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  இது உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.  அதிகமான விஷயங்களை நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.  Knowing Growing.

  • புதிய முயற்சிகள்

அகலக்கால் வைக்காதீர்கள்.  தெரியாமல் எதுவும் செய்யாதீர்கள்.  புதிய முயற்சி எடுங்கள்.  நீங்கள் தெரிந்ததை வைத்து, நீங்கள் எடுக்கும் முயற்சியில், இதற்கு முன் யாராவது ஈடுபட்டிருக்கிறீர்களா?  அவர்களுக்கு எந்த வகையில் பலன் அளித்தது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  மெலும் இதில் என்ன மாற்றங்கள் செய்தால் மேலும் முனனேறலாம், பலன் அடையலாம் என்பதை பற்றியும் யோசனை செய்யுங்கள்.  இது மிகவும் அவசியமானது.

  • உடனுக்குடன் செயல்படுங்கள்

உங்களது தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்கள் உடனுக்குடனான புதிய தொழில் நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் கற்றுக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.  இதுதான் உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானம் செய்யும் முதல் கருவி.

  • பழகும் விதம்.

பேச்சு மொழி மட்டுமின்றி உடல் மொழியிலும் முன்னேற்றம் தேவை.  முகத்திற்கு முன்பு பேசும் பொழுது தெளிவாகவும், தைரியமாகவும் துணிவுடனும் பேசுதல் வேண்டும்.  கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும்.  உங்கள் செய்கைகள் உங்கள் தைரியத்தை வெளிக் கொணர்வதாய் இருத்தல் வேண்டும்.

  • புதிய இடங்களுக்கு சென்று வாருங்கள்

புதிய இடங்களுக்கு பயணம் செய்தல் உங்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் ஒரு செயல்பாடு ஆகும்.  பயணம் உங்களை நம்பகத்தன்மை மிகுந்தவர்களாகவும், பொறுமை உள்ளவர்களாகவும் வளைந்து கொடுப்பவர்களாகவும் மாற்றும் வல்லமை உள்ளது.  கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.  புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு எளிதில் கைவரப் பெறுகிறது.  பயணம் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.  பயணம் செய்து பாருங்கள்!!!  நீங்களே உணர்வீர்கள்!!!.

  • உடற்பயிற்சி

உடற்பயிற்சி உங்களது தன்னம்பிக்கையை உயர்த்த ஒரு சிறந்த பயிற்சியாகும்.  உடலும் மனமும் ஒரு சேர உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.  இதில் ஏதேனும் ஒன்றில் சோர்வு அல்லது குழப்பம் ஏற்பட்டால் கூட மற்றொன்று வலுவாக இருந்தும் பயனற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன.

  • . சுய பரிசோதனை

எந்த ஒரு காரியத்தையும் வேறு ஒருவர் மூலமோ அல்லது வேறு நபரை வைத்தோ பரிசோதனை செய்த பிறகு நீங்கள் ஆரம்பிக்கலாம் என்று நேரத்தை வீணாக்காதீர்கள்.  வெற்றியோ தோல்வியோ நீங்களே முதலில் முயற்சி செய்ய தொடங்குங்கள்.  இது மற்றவர்கள் முன்னிலையில் உங்களை உயர்த்தியும் வேறுபடுத்தியும் காண்பிக்கும் இந்த பண்பு உங்களை உயர்த்தும்.

Leave a Reply

Your email address will not be published.