நகைகள் அணிவதன் காரணங்கள்

jewels

 

தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் போன்றவை வெறும் ஆடம்பரப் பொருட்கள் அல்ல.  பகட்டை வெளிப்படுத்துவதற்காக அல்ல.  மனிதர்களுக்கு உடல் நலத்தை அதிகரிக்க ஒவ்வொறு ஆபரணமும் அதில் வைக்கப்படுகின்ற கற்களும் உதவுகிறது.  தங்கம் உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உடல் வலியை குறைக்கவும் உதவுகிறது.  மனதையும் உடலையும் இலகுவாக்கும் தன்மை நவரத்தின கற்களுக்கு உண்டு.  இது காலப்போக்கில் உண்மை மறைந்து போலி ஊடுருவி வி்ட்டது.  மற்றும் மக்களை மோசடி செய்யும் வியாபாரமாக மாறியிருக்கிறது.  இனி நகை மற்றும் நவரத்தினம் அணிவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

  • வெள்ளி நகைகள்

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. வெள்ளி நகைகள் அணிவதால். மேலும் இரத்த நாளங்கள், எலும்பின் பலத்தை அதிகரிக்கவும் செய்கிறது.  உடல் வலியிலிருந்து நிவாரணம் அடையச் செய்கிறது.

  • செப்புக் காசுகள்

செப்பு காசுகள் மூட்டு வலியை குறைக்கிறது.  எலும்பு சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் செப்பு காப்பு அணிந்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்..

  • தங்கம்

தங்க நகை அணிவதால் ஆயுள் கூடும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே நிலவி வருகிறது.  இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.  பதட்டத்தை குறைக்கச் செய்கிறது.  மன தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறது.

  • முத்து

முத்து இதயம், செரிமானம் மற்றும் கருவுறுதல் போன்ற கோளாறுகளிலிருந்து நிவாரணம் அடையச் செய்கிறது.  மேலும் முத்து உங்கள் கோபத்தை குறைக்கவும் உதவுகிறது.  மேலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.  முத்து மாலை அணிவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கப் பெறலாம்.

  • கார்னட்டின்—Garnet

நவரத்தின கற்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நமது மூதாதையர் காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது.  இது தீய எண்ணங்களை அழிக்கிறது.  நன்மையை கூட்டச் செய்கிறது என்றும் நம்பப்படுகிறது. கார்னட்டின் கற்கள் சக்தியை அதிகரிக்க தூண்டி தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்று சொல்கிறார்கள்.

  • அம்பர் – Amber

பண்டைய காலத்திலிருந்தே அம்பர். தலை, கழுத்து மற்றும் தொண்டை வலிகளுக்கான நிவாரணியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  அம்பரில் நெக்லஸ் அணிவது மயக்கம், பதட்டம் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது

  • செவ்வந்தி கல் – Amethyst.

செவ்வந்தி கல் எனக் கூறப்படும் ”Amethyst” உங்கள் மனதை சாத்வீகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.  மன அமைதி வேண்டுபவர்கள் இந்த செவ்வந்தி கல்லை அணிவது நல்லது.

  • இந்திரக் கல் Auamarine

இந்திர நீலக்கல் கண், செரிமானம் மற்றும் பற்களின் வலிமையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.  இது எதிர்மறை எண்ணங்களை குறைத்து, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்கிறது.  இந்திர நீலக்கல் துன்பத்தை நீக்கி இன்பத்தை பெருக வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.