உணவிலிருக்கு மருந்து

blood maker

 

உடல்நலம் நன்றாக இல்லை என்று டாக்டரிடம் சென்றால் டானிக் என்ற பெயரில் ஓரிரண்டு பாட்டில்களும் நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும் தருவார்.  ஆனால் இரட்டிப்பு மடங்கு தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன. மருந்து சாப்பிடாமல் இந்த உணவுகள் சாதாரண நோய்களை தீர்க்கின்றன.  அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ முறைதான் நோய்களை குணமாக்கவும் விரட்டவும் செய்தன.  நாம் தினந்தோறும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் சில உணவுகளைப் பற்றி காண்போம்.  உணவென்ற பெயரில் போலி உணவுகள் ஜாக்கிரதைய்யா!! ஜாக்கிரதை!!!

 

மருந்தைவிட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்

 

  • மலைத்தேன்

மலைத்தேன் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.  குறிப்பாக வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்தால் மாத்திரை கொடுக்காதீர்கள்.  இயற்கை மருந்துகளை கொடுங்கள்.  உடல் நலனை பேணி காக்கும்

.

  • ஊறுகாய்

புளிப்பு உணவுகளை சாப்பிடுங்கள்.  வயிற்றுப் போக்கு நீங்கும்.  காய்கறி, தயிர், ஊறுகாய்கள் போன்றவை நல்ல பயனை தருகின்றன.  இந்த வகை உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் ஜீரணம் சார்ந்த பிரச்சனைக்கு நல்ல பயனைத் தருகின்றன.

 

  • இஞ்சி

இஞ்சி அற்புதமான நோய் நிவாரணி.  இது பிடிப்பு, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவல்லது.  ஆசியாவின் காரமான மசாலா உணவுப் பொருள்களில் இஞ்சியும் ஒன்று.  இது மருத்துவ குணம் கொண்டது.  இஞ்சி வயிற்று உப்புசம் மற்றும் குமட்டல் போன்ற கோளாறுகளை தீர்க்க உதவுகிறது

 

  • பெப்பர்மிண்ட்

பெப்பர்மிண்ட் குடல் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க வல்லது.  சூயிங்கம், மிட்டாய் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் குடல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுகின்றன

 

  • செம்பருத்தி டீ

செம்பருத்தி டீ ஒரு சிறந்த நோய் நிவாரணி.  உயர் இரத்த பிரச்சனைகளை தீர்க்க வல்லது.  மூலிகை டீ வகைகளில் இது ஒரு சிறந்த டீயாக கருதப்படுகிறது.

 

  • மஞ்சள்

மஞ்சள் தென்னிந்தியாவின் சொத்து.  நோய் எதிர்ப்பு, அலர்ஜிகள், ஞாபக மறதி போன்றவற்றிற்கு சிறந்த நோய் நிவாரணியாகும்.  மஞ்சள் உடலில் உள்ள செல்களின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.  உடலை பலமாக்கச் செய்கிறது.

 

  • சியா விதைகள்

 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு நல்ல உணவுதான் சியா விதைகள் ஆகும்.  உடலில் தங்கியுள்ள இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல். எனப்படும் கொழுப்பை உடலில் இருந்து கரைக்க சியா விதைகள் பயன்படுகின்றன.

 

  • பீன்ஸ்

பின்ஸ் குறைந்த இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய ஒரு நல்ல உணவாகும்.  பீன்ஸ் அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.  இதில் இருக்கும் நார்சத்து ஜீரணத்தை சரி செய்து உடல் எடையை சீராக்க உதவுகிறது..

 

 

Leave a Reply

Your email address will not be published.