உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வழிகள்

blood pressure_9india

 

பெரும்பாலான இந்திய மக்கள் துன்பப்படும் ஒரு பிரச்சனைதான் உயர் இரத்த அழத்தம்.  மிகவும் ஆபத்தான ஒன்று இது,  உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.  அதில் அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, புகைபிடிப்பது, உடல் பருமன், உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.   உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த போதிய சிகிச்சைகளை மேற் கொள்ள வேண்டும்.  இல்லாவிடில் உயிரை விட நேரிடும்.  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயநோய் எளிதில் வரும்.  இதனால் இரத்த குழாய் சிதைவு, மாரடைப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.  உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதனை ஐந்து நிமிடங்களில் குறைப்பதற்கு பழங்கால சைனீஸ் மசாஜ் உள்ளது.

 

ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க சைனீஸ் மசாஜ்.

 

  • உயர் இரத்த அழுத்தத்தின் போது என்ன நடக்கும்?

உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் பொழுது, தசைகள் அதிகமாக டென்ஷன் ஆகும்.  இரத்த நாளங்கள் சுருங்கும்.  அழுத்தம் அதிகரிக்கும்.  மேலும் இரத்தம் தமணிகளின் சுவர்களை வேகமாக தாக்கும்.  இதயம் இரத்தத்தை வேகமாக தள்ளும்பொழுது தமணிகள் மெலிவதோடு, இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

 

  • பழங்கால சைனீஸ் மருத்துவம்.

இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு மாஸ்கோ கால்பந்து கிளப்பின் மருத்துவரான

லு ஹீன் சென், பழங்கால சைனீஸ் மருத்துவம் ஒன்றை பரிந்துரைக்கிறார்.  மேலும் இந்த மருத்துவத்தை பின்பற்றி விரைவில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என்றும் சொல்கிறார்.

 

  • முதல் முறை.

இரத்த அழுத்தம் உயரும் போது காது மடலின் பின்புறத்தில் விரலைக் கொண்டு மேலும் கீழுமாக மிருதுவான மசாஜ் அல்லது அழுத்தம் கொடுக்க வேண்டும்.  இப்படி ஒருபக்கம் 10 முறையும், மற்றொரு பக்கம் 10 முறையும் செய்ய வேண்டும்.

 

  • இரண்டாம் முறை

இந்த முறைப்படி காதிற்கு  அரை இன்ச் முன்பு விரலை வைத்து, மூக்கின் நுனி வரை மிருதுவாக தழுவ வேண்டும்.  இப்படி இரண்டு பக்கமும் செய்ய வேண்டும்.  இதனாலும் இரத்த அழுத்தம் சீராகும்.

 

  • குறிப்பு.

சைனீஸ் மருத்துவத்தின்படி, ஓர் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராவதோடு, இரத்த அழுத்தமும் சீராகிறது.  இதனால் விரைவில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்

Leave a Reply

Your email address will not be published.