மழைக்காலத்தில் உடலைப்பாதுகாக்க

rainday

 

நம் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான பருவம் மழைக்காலமாகும். இந்த மழைக்காலத்தில் சில வகையான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.  வானிலையின் போது நாம் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.  மழைக்காலத்தை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும் வகையில் நிபுணர்களால் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.  குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு தவறாமல் பின்பற்றி வாருங்கள்.  மழைக்காலத்தில் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.  சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

மழைக்காலத்திற்கான சில ஆயுர்வேத சுகாதாரக் குறிப்புக்கள்

 

 • மிகுதியான உணவைத் தவிருங்கள்

அதிகமான எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், நன்கு வறுத்த உணவுகள், ஜங்க் உணவுகள், அமிலத்தன்மை கொண்ட புளிப்பு சுவை கொண்ட உணவுகள், காரமான ஊறுகாய் மற்றும் சட்னி மேலும் தயிர் போன்ற உணவுகளை தவிர்க்குமாறு நிபுணர்கள் கூறுகிறார்கள்.  மேலும் உப்பு அதிகம் கொண்ட உணவுகள் அமில மிகைப்பு, செரிமானம் ஆகாமை மற்றும் வீக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கிறது.

 

 • உங்கள் காலடிகளை பாதுகாக்கவும்

பாதங்கள் அடிக்கடி நனைவதற்கு மழைக்காலங்களில் வாய்ப்புக்கள் உண்டு.  குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  வெளியில் செல்லுகின்றபொழுது விழுந்து விடாமல் இருக்க நல்ல பிடி கொண்ட செருப்புக்களையே பயன்படுத்துங்கள்.  எப்பொழுதும் நகங்களை உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

 

 • எளிதான மற்றும் செரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

ஜீரணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.  பழங்கள், வேக வைத்த அல்லது சமைத்த பூசணி போன்ற காய்கறிகள், சாலட்கள், சோளம், பாசிப்பருப்பு போன்றவை உங்கள் ஜீரண அமைப்பிற்கு ஏற்ற உணவாகும்.

 

 

 • நல்ல செரிமானத்திற்கு இவற்றைக் குடிக்கவும்

கொதிநீரில் இஞ்சி, மிளகு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தினந்தோறும் ஒரு முறை குடிக்கவும்.

 

 • பச்சை காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

பச்சை இலை காய்கறிகள் தரையில் நெருங்கி வளர்கின்றன.  இதனால் ஈரப்பதம் மற்றும் அழுக்கை நிறை ஈர்க்கின்றன.  தவிர இவை செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும்.  மழைக்காலங்களில் சுத்தம் செய்யவும் கடுமையாக இருக்கும்.

 

 • சமையலில் எண்ணெய்யைக் குறைக்கவும்

மழைக்காலங்களில் உடலானது இலகுவான எண்ணெய்களை எளிதில் ஜீரணிக்கும்.  கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை விட ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய்கள் நல்லதாக இருக்கும்.  மேலும் இவை உடலுக்கு உஷ்ணத்தை அளிக்கின்றன.

 

 • நிறைய மூலிகை தேநீர் குடிக்கவும்

கீரின் டீ மற்றும் இஞ்சி டீ போன்ற மூலிகை தேநீரில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உள்ளது.  இது தொண்டையை ஆற்றுகிறது.  மழைக்காலங்களில் தொண்டைக்கு இதமளிக்கவும் பயன்படுகின்றன.

 

 • உடற்பயிற்சியை தவிர்க்காதீர்

நீங்கள் உடற் பயிற்சியை முழுவதுமான மழைக்காலத்தில் நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  மழைக்காலங்களில் செய்யப்படும் கடுமையான உடற் பயிற்சிகள், உடலுக்கு அதிக பாரம் கொடுப்பதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்.  ஆகவே குறைந்த தாக்கம் கொண்ட நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற உடற் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

 

 • வெளியே சாப்பிடாதீர்கள்

ஆயிரம் முறை இந்த அறிவுரையை கேட்டிருக்கலாம்.  ஆனால் இது கண்டிப்பாக உங்கள் உள்ளுர் பானிபூரி, பேல்பூரி பொன்றவற்றிற்கு விடை கொடுக்க நல்ல யோசனை.  .ஈரப்பதமான சூழ்நிலையில் விற்கப்படும் இந்த உணவுகள் கிருமிகளை எடுத்துக் கொண்டு அவற்றின் இயற்கையான ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன.  இதனால் உடல் நலக் கேடு விளைகிறது..

 

 • நீங்கள் உணர்வுகளை சீராக வைத்துக் கொள்ளவும்

நம் உணர்வுகளும் நமது உடல்நிலையை சீராக வைத்துக் கொள்வதில் முக்கிய இடம் வகிக்கின்றன.  எனவே மழைக்காலத்தில் எதிர்மறையான உணர்வுகளான (ஆயுர்வேதம்படி சூடான உணர்வுகள்) எரிச்சல், கோபம், ஈகோ மற்றும் பொறாமை போன்றவற்றை ஒரு ஓரமாக தள்ளி வைக்கவும்.

 

 • உறுப்புக்களின் ஆரோக்கியம்

மசாலாப் பொருட்களை சோ்த்து டீ செய்து குடிப்பதன் மூலம் உடல் உறுப்புகளில் உள்ள இடையூறுகளை நீக்குகிறது.  அதன் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.  மற்றும் உடல் உறுப்புக்களில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது..

 

 • எடை குறையும்

பொதுவாக பட்டை, கிராம்பு, சோம்பு போன்றவற்றில் உள்ள காரத்தன்மை உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டவை.  ஆகவே இந்தப் பொருட்களை கொண்டு டீ போட்டு குடிக்கும் பொழுது கண்டிப்பாக எடை குறையும்.

 

 • சுத்தமான சருமம்.

உடலில் இரத்தம் சுத்தமாகி, உறுப்புக்கள் சீராக இயங்கினாலே, சருமம் அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும்.  அதிலும் இந்த ஆயுர்வேத டீ குடிப்பதனால் சந்தேகமின்றி அழகான சருமத்தைப் பெறலாம்.

 

 • டீ செய்ய தேவையான பொருட்கள்

மல்லி – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கிராம்பு – 7, இஞ்சி – 2 துண்டு, பட்டை – 2, இன்ச் தண்ணீர் – 1 லிட்டர்.

 

 • ஆயுர்வேத டீயின் செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், சோம்பு, கிராம்பு, பட்டை, இஞ்சி சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, பின் பத்து நிமிடம் கழித்து வடி கட்ட வேண்டும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.