சருமத்தில் ஏற்படும் முக்கிய நோய்கள்!

male heros

 

நமது சருமமே நம் உடலில் மிகுதியாகக் காணப்படும் மிகப்பெரிய இடமாக விளங்குகிறது.  இதில் இருக்கும் திண்மத்தை (எலும்புகள், தசைகள், இரத்தக் குழாய்கள் போன்றவைகள்) பாதுகாப்பது மற்றும் உடல் உஷ்ணத்தை சீர்படுத்துவது உட்பட. பல முக்கிய செயல்பாடுகளை சருமம் செய்து வருகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களளை அளிக்கும் தண்ணீர், எண்ணெய் மற்றும் வைட்டமின்கள் மற்றும் முக்கியமான கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கிறது..  சருமத்தில் கணக்கிலடங்கா கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.  இது சருமத்தின் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து விடும்.  குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கைகளை அளவுக்கு அதிகமாக கழுவினால் சருமம் வறட்சியடையும்.  அதற்குக் காரணம் என்ன தெரியுமா?  அப்படிச் செய்தால் சருமத்தில் உள்ள தண்ணீரும் எண்ணெய்யும் போய் விடும்.  சருமத்தில் சில பொதுவான வியாதிகள், இன்னும் சில நோய்களோ பொதுவாக ஏற்படாத வகையாகும்.  இவையனைத்தும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

சருமத்தில் ஏற்படடும் முதன்மையான ஐந்து நோய்கள்

  • சிரங்கு (Eczema)

இதனை அடோபிக் டெர்மட்டிட்டிஸ் (Atophic dermatitis) என்றுகூறுவார்கள்.  ஒரு  வகையான சரும அழற்சியான இது மீண்டும் மீண்டும் வரக் கூடியவை.  மரபு ரீதியான காரணிகள் மற்றும் சுத்தமில்லாத சுற்றுச்சூழல் இவைகளால் தான் ..இது பொதுவாக ஏற்படும்.  அரிப்பு, சிவத்தல், வறட்சி, சருமத்தில் திட்டு, சருமம் உதிர்தல் மற்றும் வீக்கம் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகளாகும்.  சிவப்புத் திட்டுக்களை சொரிந்தால் இரத்தக் கசிவும் பொப்பளங்களும் ஏற்படும்.  அதனால் சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சொரியாமல் இருப்பது நல்லது.  குறிப்பால் நகங்கள் போன்ற கூர்மையான பொருட்களை கொண்டு சொரியக் கூடாது.  அவை உங்கள் வியாதியை இன்னமும் சிக்கலாகி விடும்.  சிரங்கு நோய் மீண்டும் மீண்டும் ஏற்படக் கூடியவை என்பதால் அதற்கென குறிப்பாக எந்த ஒரு நிவாரணமும் கிடையாது.  அதனால் அழற்சி மற்றும் எரிச்சலை குறைப்பதை நோக்கித் தான் இந்த சிகிச்சை அமையும்.

 

  • சருமமெழுகு நீர்க்கட்டி(Sebaceous cyst).

 

சருமத்தின் மேல் தோலில் சீஸ் போன்ற பொருள் தேங்கும் போது உண்டாவது தான் இந்த கோளாறு.  சருமமெழுகு சுரப்பிகள் எண்ணெய் போன்ற பொருளை சுரக்கும்.  இது

சருமம் மற்றும் சரும அடுக்குகளில் உள்ள மயிர்த் தண்டுகளுக்கு மசகை ஏற்படுத்த உதவும்.  ஏதோ காரணங்களுக்காக இந்த நடவடிக்கை தடைப்பட்டால் கட்டி உருவாகும்..  உடற்பகுதி, முகம், கழுத்து மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் இந்த கட்டி உருவாகலாம்.  துர்நாற்றத்துடன் வெளியேறும் சாம்பல் நிற அல்லது வெண்ணிற சுரப்புகளை கொண்ட மிருதுவான சிகப்புநிற புடைப்புகள் தான் இதற்கான அறிகுறியாகும்.  அளவுக்கு அதிகமாக சூரிய ஒளியில் வெளிப்படாமல் இருப்பதாலும் சுத்தமாக இருப்பதாலும் சருமமெழுகு நீர்க்கட்டிகளை தடுக்கலாம்.  கட்டிகளை குணப்படுத்த, பாதிக்கப்பட்ட இடங்களில் வெப்ப பேட்களை வைக்கலாம்.  இருந்தாலும் இந்த கட்டிகள் திரும்பி திரும்பி வந்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ டாக்டரை நாடுவது நல்லது.

 

  • வெண்குஷ்டம் (Vitiligo)

உலகம் முழுவதும் உள்ள பலரையும் தாக்கக் கூடிய பொதுவான சரும நோய்களில் இதுவும் ஒன்று.  இந்த நோய் வந்தால் சருமத்தில் சில பகுதிகளில் நிறமிகளை இழக்கவேண்டி வரும்.  அதற்குக் காரணம் சருமத்தில் உள்ள குறிப்பிட்ட சில திட்டுகளின் மீது மட்டுமே (மெலனோசைட்டுகள் (சரும நிறமி அணுக்கள்) அழிகிறது.  இந்த பிரச்சினை உடலில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வரலாம் அல்லது உடல் முழுவதும் கூட வரலாம்.

 

  • படைநோய்

சரும நோயில் படை நோயானது சருமத்தின் மீது சிகப்பு படைப்புகளை ஏற்படுத்துகிறது.  மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துகிறது.  இவை பல்வேறு அளவு மற்றும் வடிவத்தில் உண்டாகக் கூடியது.  இவை வேகமாக நகரும்.  ஒரு இடத்தில் மறையும் பொழுது இன்னொறு இடத்தில் உருவாகும்.

 

  • பருக்கள்.

பருக்கள் என்பது இன்னொறு சரும கோளாறு.  பருக்கள் எல்லா வயதினருக்கும் வரக்கூடியது.  விடலை பருவத்தினருக்கு பருக்கள் பரவலாக ஏற்படும்.  சருமத்தின் மீது கரும்புள்ளிகள், சிகப்பு திட்டுக்கள, வெண்ணிற புள்ளிகள் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும்.  மயிர்க்கால்கள் பல உங்கள் சரும துவாரங்களை அடைத்தால் பருக்கள் ஏற்படும்.  சரும மெழுகு அளவுக்கு அதிகமான சீதத்தை சுரக்கும் பொழுது பருக்கள் ஏற்படும்.  மரபு ரீதியான மாற்றங்கள், ஹார்மோன் நடவடிக்கைகள், உளவியல் ரீதியான கோளாறுகள், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் தொற்றுக்கள் போன்றவைகள் எல்லாம் பருக்கள் வருவதற்கான மற்ற காரணங்களுாகும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.