மோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்

download (19)

20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்கு கேப்டன் அப்ரிடி மன்னிப்பு கோரியுள்ளார். பாகிஸ்தானுக்கு திரும்பாமல் தற்போது துபாயில் தங்கி இருக்கும் அப்ரிடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ செய்தியில், ‘என்னை பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை.

பாகிஸ்தான் மக்களுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், நானும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாததற்கு பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.