தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் நல்லது?

honey

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

தேன் மருத்துவக் குணம் கொண்ட ஓர் அற்புத நோய் நிவாரணி.  தேனில் கணக்கற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.  தேனில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் நிறைய உள்ளது.  இதனால் தான் தேன் பல நுாற்றாண்டுகளாக ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உபயோகப்படுத்தப்படுகிறது.  உணவில் தேன் பட்டையை சேர்த்துக் கொண்டால் உடல் எடை மாற்றம் தெரியும்.  சர்க்கரைக்குப் பதிலாக தேனை சேர்த்துக் கொள்ளலாம்.  தேனை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பலன் பெறுவோம்.

 • பாலுடன் தேன்

இரவில் தூங்குவதற்கு முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்.  இதயம் பலம் பெறும்.  நல்ல உறக்கமும் வரும்.

 • பழச்சாறுடன் தேன்

பழங்களை ஜுிஸ் போடுகிறீர்கள்.  அத்துடன் தேனை கலந்து குடியுங்கள்.  இப்படிச் செய்தால் உடலில் பலம் அதிகரிக்கும்.

 • எலுமிச்சையுடன் தேன்

இருமல் பிரச்சனை நீங்க, எலுமிச்சைச் சாற்றுடன் தேனை கலந்து சாப்பிடுங்கள்.

 • மாதுளையுடன் தேன்

உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க மாதுளை ஜுிஸ் போட்டு அத்துடன் தேனை கலந்து குடித்து வாருங்கள்.

 • சுடுநீருடன் தேன்

ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு தேனை கொதி நீரில் கலந்து குடியுங்கள்.

 • இஞ்சியுடன் தேன்

உடலில் உள்ள பித்தங்களை நீக்குவதற்கு இஞ்சி சாற்றுடன் தேனை கலந்து  குடியுங்கள்.

 • ரோஜாப்பூவுடன் தேன்.

ரோஜாப்பூவை தேனில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.  உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் குறையும்.

 • நெல்லிக்காய் சாற்றுடன் தேன்.

நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வர, இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.

 • தேங்காய்ப் பாலுடன் தேன்

வாய்ப்புண் மற்றும் குடல் புண் குணமாக தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள்.

 • கேரட் சாற்றுடன் தேன்.

இரத்த சோகை பிரச்சனை நீங்க கேரட் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள்.

 • ஆரஞ்சு பழச்சாற்றுடன் தேன்

ஆரஞ்சு பழச் சாற்றோடு தேன் கலந்து குடித்துவர இரவில் நல்ல நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published.