தேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்

Palm jaggery tea pic1_thumb

தேனீரில் பொதுவாக சர்க்கரை கலந்து தான் பருகுவோம்.  தேனீர் கசப்புச்சுவையும் உவர்ப்புச்சுவையும் கலந்து இருக்கும்.  இதில் சற்று இனிப்பை சேர்க்கும் போது நமக்கு ருசியான தேனீர் கிடைத்துவிடும்.

இந்த தேனீரில் சர்க்கரை வழியாகத்தான் இனிப்பை சேர்க்க வேண்டும் என்பதுகிடையாது. சர்க்கரை வழியாகவும் சேர்க்கலாம் என்பது தான் உண்மை.

இப்போது சர்க்கரையை தவிர மற்ற வழிகளில் எப்படியெல்லாம் இனிப்பை சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.

வெல்லம் மிகவும் தித்திப்பாக இருக்கும்.  கேரளாவில் அச்சுவெல்லம் மற்றும் வறட் டீ இரண்டும் கொடுப்பார்கள்.  டீ குடித்துவிட்டு வெல்லத்தை கடித்துவிட வேண்டும்.  வெல்லம் உடலுக்கு நல்லது. உடலில் சக்தியைப் பெருக்கி உடலுக்கு கெடுதல் தரும் இரத்தச் சோகையை விரட்டி அடிக்கும்.

வெல்லம் அதைவிட பனைவெல்லம் மிக நல்லது.  வெல்லம் இருமல் சில பேருக்கு தரும்.  ஆனால் பனைவெல்லம் நோயாளிக்கு சிறந்தது.  இது இன்னும் உடலுக்கு நன்மை தரக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.