பெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்

raghvendrabro_sanjaysuri_2

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர் ராகவேந்திரன் கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது 35 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் தமிழக மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ் ஒருவர் என்பது தெரியவந்தது. இதனை பெல்ஜியத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் உறுதி செய்தது.

இந்நிலையில், தமிழர் ராகவேந்திரன் கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கண்மூடித்தனமான தாக்குதலில் நம்பிக்கை மிகுந்த இளைஞரின் உயிர் பறிபோயிருக்கிறது என கூறியுள்ளார்.

மென்பொருள் பொறியாளரான ராகவேந்திரன் கணேஷ் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.