ஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்

201603260058318729_PerumpakkamATM-In-the-centerMonitoring_SECVPF

ஆலந்தூர் பெரும்பாக்கத்தில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருடியதாக பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கண்காணிப்பு கேமரா திருட்டு
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியின் தரை தளத்தில் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. கடந்த 22–ந்தேதி ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை மர்மநபர் ஒருவர் உடைத்து திருடிச்சென்று விட்டதாக பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் அந்த வங்கியின் கிளை மேலாளர் பூங்கோதை புகார் செய்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமியை போலீசார் தேடி வந்தனர்.

வாலிபர் கைது
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக படப்பையை சேர்ந்த பாண்டி(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது சொந்த ஊர் சிவகாசி ஆகும். பி.எஸ்.சி. பட்டதாரியான பாண்டி, தனியார் கல்லூரிகளில் ‘இன்வெட்டர்’களை பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.

‘‘கடந்த 22–ந்தேதி பெரும்பாக்கத்தில் உள்ள அந்த வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்று ஏ.டி.எம். கார்டை செருகி பணம் எடுக்க முயன்றேன். பணம் வராததால் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கையால் தட்டினேன். அது கையோடு வந்துவிட்டது. பின்னர் அந்த கண்காணிப்பு கேமராவை அங்கேயே வைத்து விட்டேன்’’ என போலீசாரிடம் பாண்டி தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், கைதான பாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

One Response to ஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்

  1. Anban says:

    தண்டன முடிஞ்சு வெளியே வந்து, அந்தப் பூங்கோதை கிட்ட நேராப் போயி கிழி, கிழி -ன்னு கிழிச்சுடு …. நியாயத்தைத் “தட்டி”க் கேளு -ன்னு சொல்ல வந்தேன் ….

Leave a Reply

Your email address will not be published.