ஹெபடைடிஸ் பி வைரஸ்

hepatities virus

 

உலகம்  முழுவதும் அமைதியாக ஹெபடைடிஸ் பி வைரஸ் நோய் பரவி வருகிறது.  இந்த நோயால் 370 மில்லியன் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.  ஒரு மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் மரணம் அடைகின்றனர்.  உலக ஹெபடைடிஸ் தினம் ஜுிலை 28 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  இத் தினத்தையொட்டி உலகின் பல பகுதிகளிலும் கல்லீரல் நோயைக் குறித்து விழிப்புணர்வு நடைபெறுகிறது.  ஹெபடைடிஸில் பல வகைகள் உள்ளன.  அதில் ஹெபடைடிஸ் பி மிகவும் ஆபத்தானது.

அறிற்து கொள்ள வேண்டிய பத்து தகவல்கள்.

தகவல் ஒன்று.

ஹெபடைடிஸ் பி வைரஸ்க்கு தடுப்பூசி இருக்கிறது.  இருந்தபோதிலும், ஒவ்வொரு 30-45 வினாடிக்குள் ஹெபடைடிஸ் பி வைரஸ் (எச்.பி.வி.) நோய்த்தொற்று ஒருவரை மரணிக்கச் செய்கிறது.

தகவல் இரண்டு

பெரும்பாலான மக்கள் ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களுக்கு இந்த தொற்று இருப்பது குறித்து தெரிந்து கொள்வதில்லை.  உலக சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை தந்துள்ளது இந்த  ஹெபடைடிஸ் பி வைரஸ் நோய்.

தகவல் மூன்று

எச்.ஐ.வி. ஆப்ரிக்காவில் பரவலாக உள்ளது.  எச்.பி.வி ஆசியாவில் அதிகம் உள்ளது.  உலகம் முழுவதும் எச்.பி.வி ஆனது எச்.ஐ.வி யை விட 10 மடங்கு பரவியுள்ளது.

தகவல் நான்கு

எச்.ஐ.வி.வைரசானது தொற்றும் தன்மையைக் கொண்டது.  மற்றும் பரவும் தன்மையும் கொண்டது என்பது பொதுவான அபிப்ராயம் ஆகும்.  ஹெபடைடிஸ் பி வைரஸ் இதனை விட 100 மடங்கு அதிகமாக தொற்றும் தன்மையைக் கொண்டது..

 

 

தகவல் ஐந்து

சரியாக சிகிச்சையளிக்கப்படாத அல்லது கண்காணிக்கப்படாத ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று, கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்று நோயை ஏற்படுத்துகிறது.  இந்த நோய் 25 சதவிகித மக்களை மரணிக்கச் செய்கிறது.

தகவல் ஆறு.

ஹெபடைடிஸ் பி வைரஸ் போன்ற மற்றொரு வைரசால் ஹெபடைடிஸ் சி தொற்று உண்டாகிறது.  இது உலகம் முழுவதும் 180 மில்லியன் மக்களை பாதிப்பு அடையச் செய்கிறது.

தகவல் ஏழு

ஹெபடைடிஸ் சி. ஹெபடைடிஸ் பி இரண்டும் உலக அளவில் ஆறு பில்லியன் மக்களில் 560 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.

தகவல் எட்டு

ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று கொண்ட கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

தகவல் ஒன்பது

இரத்தம் உறையாமையால் பாதிக்கப்பட்டவர்கள். சட்ட விரோதமான மருந்துகள் மற்றும் ஊசிகளை எடுத்துக் கொள்பவர்கள், பலருடன் பாலியல் ரீதியான தொடர்பு கொண்டவர்கள், ஓரின சேர்க்கை மற்றும் இருபால் ஆண்கள், பொதுநல ஊழியர்கள், கைதிகள், உடலில் பச்சை இட்டுக் கொள்பவர்கள் போன்றோர் ஹெபடைடிஸ் பி வைரஸ் நோய் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்கள், அலாஸ்கா எஸ்கிமோக்கள், பசிபிக் தீவுகள், ஹைத்தியன் மற்றும் இந்தோ-சீனாவில் குடியேறியவர்கள் உலக மக்கள் தொகையில் அதிகம் உள்ளவர்கள்.  இந்த பகுதிகளில் பயணம் செய்வோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தகவல் பத்து

ஹெபடைடிஸ் பி இனக் கலப்பு தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகும்.  இதில் எந்த இரத்தப் பொருட்களும் மனித இரத்தமும் இல்லை.  இது மரபணு மறு பொறியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது.  மேலும் நல்ல பாதுகாப்பிற்கு ஆறு மாத காலத்திற்கு மூன்று ஊசி தேவைப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.