தலைபாரம் குறைய வேண்டுமா?

images (3)

இப்போது வெயில் காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் தலையில் வெயில் தாக்கும். வியர்வை அதிகமாக வந்துவிடும்.  ஆண்களும் சரி பெண்களும் சரி வியர்வை உள்ளே செல்வதால் தலை பாரமாக இருக்கும்.  இதனால் தலை வலி வந்துவிடும். தலைவலி வந்துவிட்டால் உடனே ஜலதோஷமும் பிடித்துவிடும்.

இந்த தலைபாரத்தை குறைக்க வேப்பம் புண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சுவிடலாம். தும்பை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகலாம். விராலி மஞ்சளில் விளக்கெண்ணெய் கலந்த திரிவிளக்கில் காட்டினால் புகை வரும்.  இந்த புகையை இழுத்தால் போதும். தலைபாரம் குணமாகி விடும்.

தைல இலையை மைய அரைத்து தலையில் பற்றுப்போட்டால் போடும். உடனே தலையில் உள்ள நீரனைத்தும் இறங்கி கீழே வந்துவிடும்.

கற்பூரத்தை பொடியாக்கி தண்ணீர் விட்டு கலக்கி நெற்றியில் தடவி வந்தால் போதும். நீர் வெளியேறி வந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.