சாதி வெறி கொலையான சங்கரின் மனைவி கவுசல்யா நேற்று விசாரனை

kowsalya2_2784483f

உடுமலையில் காதல் கணவர் சங்கர் கொலை செய்யப்பட்டது குறித்து பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கவுசல்யா, நேற்று இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

கலப்புத் திருமணம் செய்த தம்பதியர் சங்கர் கவுசல்யா ஆகியோர் கடந்த 13-ம் தேதி, உடுமலை பேருந்து நிலையப் பகுதியில் தாக்கப்பட்டதில், சங்கர் இறந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜராகி கவுசல்யா ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

முன்னதாக, கோவை அரசு மருத் துவமனையில் இருந்து 108 ஆம்பு லன்ஸ் மூலம், உடுமலை காவல் ஆய்வாளர் தவமணி தலைமை யிலான போலீஸார் கவுசல்யாவை அழைத்து வந்தனர். கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன் றத்துக்குள் மதியம் 1.30 மணிக்கு ரகசிய வாக்குமூலம் அளிக்கத் தொடங்கினார். நீதிமன்ற வளாகத் தில் இருந்தோர் வெளியேற்றப்பட் டனர். ரகசிய வாக்குமூலம், மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இரண்டரை மணி நேரம், சங்கர் கொலை சம்பவம் குறித்து விசா ரணை நடைபெற்றது. இதில், கவுசல்யாவுடன் கொலைச் சம்ப வத்தை நேரில் பார்த்த சாட்சியங் களும், நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், பல்லடம் நீதிமன்றத் தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கவுசல்யா அழைத்து செல்லப்பட்டார்.

சிகிச்சை இன்னும் தேவை

கோவை அரசு மருத்துவமனை யில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் கவுசல்யா உடல்நிலை தேறியிருப்ப தாக மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “கொலை சம்பவத்தின்போது இவரது தலையில் ஏற்பட்ட பலத்த வெட்டுக் காயத்துக்கு 36 தையல் போடப் பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது இன்னும் பிரிக்கப்படவில்லை. தொடர்ந்து அவருக்கு தலை நரம்பியல் சிகிச்சை தேவைப் படுகிறது” என்றார்.

தொடர்புடையவை

Leave a Reply

Your email address will not be published.