4 அடி நீளமுள்ள பெருச்சாளி – கின்னஸில் இடம் பெறப் போகின்றது

article-0-186F5B3E00000578-511_636x382

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனை சேர்ந்தவர் டோனி சுமித் இவர் கியாஸ் நிறுவன என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு வளைக்குள் இருந்து பெரிய எலி ஒன்று வெளியே வந்தது. அதை கண்டதும் டோனி சுமித் அதை பிடித்துக் கொண்டார். அந்த எலி, வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளம் இருந்தது. 11½ கிலோ எடையை கொண்டிருந்து. பூனையை விடவும் மிக பெரிதாக இருந்தது.

இது தொடர்பாக டோனி சுமித் கூறும்போது, எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது என்று கூறினார். இதுவரை பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.