தயிர் மற்றும் பால் இவற்றில் சிறந்தது

curd

 

மனிதர்களில் சிலர் தயிரை விரும்பி சாப்பிடுவார்கள்.  சிலர் பாலை விரும்பி குடிப்பார்கள்.  இவை இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லதுதான். ஊட்டச்சத்து நிபுணர் நைனி என்பவர் இவற்றில் தயிர்தான் சிறந்தது என்று சொல்கிறார்

  • ஏன் தயிர் சிறந்தது

தயிரில் நல்ல பாக்டீரியா (புரோபயோடிக்ஸ்) உள்ளது.  வயிறு பிரச்சனைகள் குணமாகும்.  ஜீரணம் சீக்கிரம் ஆகும்.  குடல் சுத்தமாகும்.  எலும்புகளுக்கு நல்லது.  சிறுநீர் பாதை தொற்றுகள் அகலும்.

  • அப்படியெனில் பால் கெட்டதா?

நிச்சயமாக இல்லை.  ஏனென்றால் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.  குறிப்பாக கனிமச் சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அடங்கியுள்ளது.  ஆனால் பாலுடன் தயிரை ஒப்பிடுகையில் தயிர்தான் சிறந்தது என்கிறார்.

  • அதிக கொழுப்புள்ள தயிரை விட குறைவான கொழுப்பு சிறந்ததா?

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், குறைவான கொழுப்புள்ள தயிர்தான் சிறந்தது.  அதிலும் கொழுப்பு நீக்கப்படாத 100 கிராம் தயிரில் 60 கலோரிகள் உள்ளது.  ஆனால் கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 22 கலோரிகள் உள்ளது.

  • ஒரு நாளைக்கு எவ்வளவு தயிர் உட்கொள்ளலாம்

தினந்தோறும் 250 மி.லி. தயிர் எடுத்துக் கொள்வது நல்லது.  நீங்கள் எடுத்துக் கொள்ளுகின்ற மற்ற உணவுகளை பொறுத்து மாறுபடும்.

  • தயிர் சாப்பிட எது சிறந்த காலம்

தயிரை மதியம் இரண்டு மணிக்கு முன்னால் சாப்பிடுவது தான் நல்லது.

  • தயிரை யார் சாப்பிடக் கூடாது. ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், ஆர்த்ரிடிஸ் மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.