ரஷ்ய விமானம் தரையிறங்கும் போது விபத்து 52 பேர் பலி

crash01_3488776b

துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது 50-100 மீட்டர் உயரத்தில் இருந்து (164-328 அடி) விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட 59 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது. இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.