உடல் சக்தி பெற வேண்டுமா இதை முயற்சி செய்யுங்கள்.

images (1)

சிலர் பிறந்ததில் இருந்தே பலவீனமாகவும், பலம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.  இவர்கள் பிறவி குணமே அது தான்.  இன்னும் சிலர் காய்ச்சல் மற்றும் விபத்தில் அடிபட்டு வெகு நாட்கள் படுக்கையில் இருந்து எழும் போது தொடர்ந்து பலவீனத்தை உணர்வர்.

உடல் சக்தி பெற வேண்டுமெனில் 2 தேங்காய் மூடி  மற்றும் இரண்டு வாழைப்பழங்கள் என தொடர்ந்து ஒரு மாதகாலம் சாப்பிட்டு வரலாம்.

உடல் இன்னும் பலமாக எலும்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.  உடல் பலமாக வேண்டுமெனில் வலிமையான இருப்பை போன்று எலும்பு இருக்க வேண்டும்.  எலும்பு பலமாவதற்கு உளுந்து மிக முக்கியம், உளுந்தங்கஞ்சி, உளுந்தப்பருப்பு, உளுந்தவடை போன்றவை உடலுக்கு மிக முக்கியமானது.

பப்பாளிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்கள் கூட வலிமையானவர்களாக மாறிவிடுவார்கள். அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும் இது புதிய ரத்தத்தை உடலில்  ஊற வைத்து நமக்கு பலத்தை உண்டு பண்ணும்.

காலையில் பேரிச்சை பழங்களை மென்று உமிழ்நீர் சோ்த்து விழுங்கி வரவும்.  உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

உலர்திராட்சையை இரவில் தேனில் அல்லது நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வர உடல் நல்ல பலமாக வளரும்.

Leave a Reply

Your email address will not be published.