ஆறாத புண்கள் குணமாக

-e1428915311652

சில பேர்களுக்கு புண்கள் வந்தால் சீக்கிரமாக ஆறாது.  குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாவம் தான்.  சீழ் பிடித்து, வீங்கி, நெறிகட்டி பின் ஆறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடும்.  இந்த பிரச்சினை தீர நாம் செய்ய வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிணற்றுப்பாசான் இலையை நன்றாக கசக்கி புண்கள் மீது சாறு பிழிந்துவிடவும். அந்தச்சாறு மெதுவாக கீழிறங்கி புண்களுக்குள் சென்று சீழ் பிடித்தலை சரிசெய்துவிடும்.  சீழ் பிடித்தலை சரிசெய்தப்பின் புண்கள் தானாகவே ஆறிவிடும்.

வெட்டுக்காயங்களுக்கு கூட கிணற்றுப்பாசான் இலையை பயன்படுத்தலாம். சிலந்தி கொப்புளங்கள் வந்துவிட்டால் சீக்கிரமாக பழுக்க வைக்க நாம் கரியும் வேப்பிலையும் பயன்படுத்த அரைத்து அதை சிலந்தி மீது பற்றுப்போட்டால் உடனே பழுத்து சீழ் வந்து விடும்.

கால் மற்றும் மூட்டுகளில் விபத்தால் ஏற்படும் புண்கள் உடனே ஆறி சதை வளர நாம் ஊமத்தை இலைச்சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவைகளை சேர்ந்து அரைத்து பற்றுப் போடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.