பாகிஸ்தானில் பஸ்ஸில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி

download (11)

பாகிஸ்தானின் மார்தான் பகுதியில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று பெஷாவரில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர்கள் 15 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து போலீஸ் உயரதிகாரி முகம்மது காசிப் கூறுகையில், பேருந்தின்  உள்ளே வெடி பொருட்களை மறைத்து வைத்து, வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த போது பேருந்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் தலைமை செயலக ஊழியர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என்று கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.