3D பிரின்டிங் முலம் மருத்துவம்

3d skull

மருத்துவம் நாளொறு வண்ணம் மின்னல் வேகத்தில் மேலே உயர்ந்து சென்று கொண்டிருக்கிறது.  இது உண்மையிலேயே நல்ல வளர்ச்சி தான்.  3டி பிரிண்டிங் மூலம் பத்தாண்டுக்குள் இராணுவ வீரர்களுக்கு உணவு உற்பத்தி செய்யப் போவதாக அமெரிக்கா ஒரு தொழில் நுட்ப மாநாட்டில் அறிவித்தது.  3டி பிரிண்டிங் பயன்படுத்தி ஒரு வாலிபர் துப்பாக்கி தயாரித்து துப்பாக்கி சூடு நிகழ்த்திய சம்பவமும் நிகழ்ந்தது.  இப்பொழுது இதே 3டி பிரிண்டிங் உதவியோடு, வாழ்வோடு போராடி வந்த சீனாவை சோ்ந்த ஹான் ஹான் 3 வயது குழந்தைக்கு மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வாழ்ந்து வருகிறார்.

3டி பிரிண்டிங் மூலம் குழந்தையின் மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சை

ஹான் ஹான் மூளையில் சுரப்பி பிரச்சனை

மூளையில் சுரக்கும்செரிபரமுள்ளிய திரவம் (Cerebrospinal fluid) அதிகமாக சுரந்ததால், ஹான் ஹானின் தலை பெரிதாக ஆனது.  எப்பொழுதும் இருக்கும் அளவைவிட நான்கு மடங்கு பெரியதாக ஹான் ஹானின் தலை வளர்ந்தது.

கண்பார்வை பறிபோகும் நிலை

இந்த பிரச்சனையால் ஹான் ஹானுக்கு மூளையில் தொற்றகள் ஏற்படலாம் என்றும் கண் பார்வை பறிபோகும் நிலை ஏற்படலாம் என்றும் டாக்டர்கள் அச்சம் தெரிவித்தனர்.  இதனால், மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் முடிவு செய்தனர்.

எப்படி மண்டை ஓடை மாற்றுவது

3டி பிரிண்டிங் முறையில் மண்டை ஓடை மாற்றி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்தனர்.  ஆனால் இதற்கான செலவு நான்கு முதல் ஐந்து இலட்சம் சீன பணம் செலவாகும் என்று கூறினார்.

நன்கொடைதந்து உதவி

சீன பணம் ஒரு லட்சம் வரை நன்கொடையாக கிடைத்தது.  இதை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது

17 மணிநேர போராட்டம்

ஹான் ஹானுக்கு முழுவதுமாக 3டி பிரிண்டிங் முறையில் மண்டை ஓட்டை மாற்றியமைத்தனர் டாக்டர்கள்.  இந்த அறுவை சிகிச்சை செய்ய ஏறத்தாழ 17 மணி நெரம் ஆகியது.  கடைசியில் வெற்றிகரமாக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து முடித்தனர்.

அறுவை சிகிச்சையின் போது.

அறுவை சிகிச்சை செய்யும் போது, ஹானின் மேல் மண்டை ஓடு முழுவதுமாக அகற்றப்பட்டது.  மூளையில் சுரந்த அதிகமான சுரப்பியை வற்றச் செய்தனர்.  பிறகு புதியதாய் 3டி பிரிண்டிங் முறையில் டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்ட மண்டை ஓட்டை அறுவை சிகிச்சை மூலம் இணைத்துள்ளனர்.

நலமுடன் இருக்கும் ஹான்.

அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே கண்ணை திறந்தும், நன்கு சுவாசித்தும் காணப்பட்டார் ஹான்.  இவர் வளரும் போது. இவரது மண்டை ஓடுடன் சேர்ந்து புதியதாய் இணைக்கப்பட்ட மண்டை ஓடும் படர்ந்து வளரும் என்று டாக்டர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

பல நாடுகளில் இந்த வினோத பிரச்சனை இருக்கிறது.

ஹான் ஹானுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள்.  இந்த அறுவை சிகிச்சை ஒரு நல்ல முன் உதாரணமாகவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published.