சர்க்கரைநோய் அறிகுறிகள்

sugar patient

 

இந்திய மக்களின் மனஅழுத்தத்திற்கு அடுத்தபடியாக நீரிழிவு நோயால் தான் அதிகம் போ் பாதிப்படைகிறார்கள்  உலகிலேயே அதிக மக்கள் சர்க்கரை நோயினால் தான் துன்பம் அடைகின்றனர்  இந்த சர்க்கரை நோய் வருவதற்கு மன அழுத்தம், பரம்பரை, நார்ச்சத்து குறைபாடு, உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களினால் தான் வருகின்றன.  சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கம்தான் நீரிழிவு.  பொதுவாக கணையம் இன்சுலினை சுரந்து, இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.  ஆனால் நீரிழிவு பிரச்சினை ஏற்பட்டால் தேவையான அளவு இன்சுரின் சுரக்காமல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் தென்படும் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சுட்டிக்காட்டும் அறிகுறிகள்.

  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது நீரிழிவு நோய் இருப்பதன் அறிகுறி.  உடலில் குளுக்கோஸ் உறிஞ்சப்படாமல் சிறுநீரின் வழியே அடிக்கடி வெளியேற்றப்படுகிறது.  இதனால் உடலில் வறட்சி ஏற்படுகிறது.  இந்த அறிகுறி தென்பட்டால் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

  • தண்ணீர் தாகம்

சிறுநீர் கழித்த உடனேயே தாகம் ஏற்பட்டால் டாக்டரை சென்று பாருங்கள்.  ஏனென்றால் இது நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று.

  • திடீர் எடை குறைவு

டயட், உடற்பயிற்சி போன்ற எதுவும் மேற்கொள்ளாமல் இருக்கும் பொழுது சட்டென்று உங்கள் உடலின் எடை குறைந்தால் அதுவும் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

  • சோர்வு.

உடலின் சமமான செயல்பாட்டிற்கு சக்தி மிகவும் முக்கியமானது.  பல நாட்கள் அதிகமான சோர்வு வருகிறது என்று உணர்ந்தால் டாக்டரிடம் உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

  • பார்வைக் கோளாறு.

பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது சர்க்கரை நோய்.  இது கண்களை பாதிக்கச் செய்கிறது.  கண்புரை, கண் அழுத்த நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.  ஆகவே உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

  • சரும பிரச்சனை

நீரிழிவு நோய் வந்தால் சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடுகிறது.  நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு சரும பிரச்சினையால் துண்பப்பட்டால் டாக்டரை சந்திக்கவும்.

  • அதிகமாக சாப்பிடுவது

சர்க்கரை நோய் இருந்தால் எதையாவது சாப்பிட்டுக் கொண்டெ இருக்கத் தோன்றும்.  மற்றும் அடிக்கடி பசிக்க ஆரம்பிக்கும்.

  • சிறுநீர் பாதை தொற்று.

சிறுநீர் பாதை தொற்றுகளை அடிக்கடி சந்தித்து வந்தால் அதுவும் நீரிழிவிற்கான அறிகுறிகளுள் ஒன்று.  இந்த மாதிரியான பிரச்சினை வந்தால் டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

  • 40 வயது எட்டியவரா?

உங்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டதா?  உங்கள் குடும்பத்தாருக்கு சர்க்கரை நோய் இருந்திருக்கிறதா?  அப்படியென்றால் தவறாமல் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.