பெஞ்சில் உட்கார சண்டையால் சக மாணவன் கத்தியால் குத்திக்கொலை

960d9e60-6421-44ba-b440-d3d4d551edb5_S_secvpf

பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் பெஞ்சில் உட்கார இடம் பிடிப்பதலில் உருவான சண்டையில் சக மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள சின்னசேலம் அருகேயுள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு.  இவர் மின்துறையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் மகேந்திரன், குருநாதன், பாலமுருகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் குருநாதன் அம்மையகரத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான்.

அவரது தம்பி பாலமுருகன் அதே பள்ளியில் 7 வது படித்துவந்தான்.  எப்போதும் போல் அண்ணனும் தம்பியும் பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பு பணிக்காக மற்றொரு பள்ளிக்கு சென்றுள்ளனர்.

இதனால் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே 7-ம் வகுப்பு ஏ மற்றும் பி பிரிவு வகுப்புகளை சேர்ந்த மாணவர்களை ஒரே வகுப்பறையில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டது. அப்போது அந்த வகுப்பறையில் உள்ள இருக்கையில் அமர்வது தொடர்பாக பாலமுருகனுக்கும், சக மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், பாலமுருகனை கையால் குத்தி தள்ளிவிட்டான். இதில் தடுமாறிய பாலமுருகன் அங்கிருந்த இரும்பு பெஞ்சின் மீது விழுந்தான்.

இதனால் பாலமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலமுருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த பாலமுருகனின் பெற்றோர், மகனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் எதேச்சையாக நடந்த சம்பவத்தில் பாலமுருகன் இறந்ததாக கூறி சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக மாணவனை கைது செய்தனர். பின்னர் அவனை விழுப்புரம் இளம்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் இளம்சிறார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

முன்னதாக பாலமுருகன் சாவு சம்பவத்தில் தொடர்புடைய மாணவன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாலமுருகனின் உறவினர்கள், அம்மையகரம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.