சாட்டிங் செய்வதால் ஏற்படும் தீமைகள்!

chatting

 

நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் தொழில் நுட்பம் மட்டும் மாறியிருக்கிறது.  முதலில் பேஜர் பின்பு மொபைல், பிறகு எஸ்.எம்.எஸ்.  இதன் தொடர்ச்சியாய் பல கணினி உபயோக சாப்ட்வேர்கள்,  இப்பொழுது வாட்ஸ்-அப் என பரிமாணமாய் மாறியிருக்கிறது.  இப்படி மாறினாலும் எண்ணிக்கையிலோ, பயன்படுத்தும் முறையிலோ, உபயோகப்படுத்தும் விதத்திலோ எந்த அளவும் மாற்றம் ஏற்படவில்லை.  ஈசலின் இறகுகளின் வேகத்தை விட வேகமாக செய்தியை டைப் செய்து அனுப்பும் திறன் இளம் இளைஞர்களுக்கு இருக்கிறது.  காதலில் இருப்பவர்கள் ”அதுக்கு மேல்”.  நீங்கள் இவ்வாறு செய்து அனுப்பும் பின்னணியில் நடக்கும் சில அபூர்வமான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

விசித்திரமான தகவல்கள்.

  • கழுத்து வலி,

நீங்கள் படுத்தவாறு அமர்ந்தவாறு செய்தி அனுப்புகிறீர்கள்.  தொடா்ச்சியாக பல மணி நேரம் உங்கள் கழுத்தை ஒரே நிலையில் வைத்து அனுப்புகிறீர்கள்.  இதுதான் உங்கள் முதுகு மற்றும் கழுத்து வலிக்கு காரணமாய் அமைகிறது.

  • உணர்ச்சியைக் குறைக்கிறது.

காதல், சிரிப்பு, காமம், அழுகை என அனைத்து உணர்ச்சிகளும் எமொஜி, ஸ்மைலி எனும் பொம்மைக்குள் அடங்கி விட்டது.  நகைச்சுவை கூறி குறுஞ்செய்தி வந்தால் கூட சிரிக்கும் எமொஜியை அனுப்பிவிட்டு தங்களது வேலையை செய்யும் மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.  காதலிக்கு எமொஜி முத்தம் கொடுத்துவிட்டு, எதிரே இருக்கும் நண்பர்களை திட்டும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

  • பாதை மாறுகிறார்கள்

குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் நடந்து செல்லும் நபர்கள் பெரும்பாலும் செல்ல வேண்டிய பாதை மாறி செல்கிறார்கள்.  காலதாமதமாக செல்கிறார்.. இதனால் தங்களது வேலையிலும் கவனத்தை சிதறவிடுகிறார்கள்.

 

  • உறவுகளில் பிரியமும் பிரிவும்

அன்பும், பிரிவும் ஏற்பட குறுஞ்செய்தி ஒரு கருவியாக இருக்கிறது.  முக்கியமாக       வாட்ஸ் அப்.  தாங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்ததும் பதில் அளிக்காமல் இருந்தால் உறவை பாதிக்கிறது.  இதனால் பிரிவை ஏற்படுத்துகிறது.  அடிக்கடி அவரவர் புகைப்படம் மற்றும் ஒலிப் பதிவு பகிர்வுகள் மூலம் உறவில் அன்பை வளர்க்க உதவுகிறது.

  • உடல் நல முன்னேற்றம்

சிலர் மருந்து சாப்பிடும் நேரம், டாக்டரை பார்க்க வேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவற்றை தங்களது குறுஞ்செய்தியில் பதிய வைத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு மருந்து சாப்பிட்டு உடல்நலத்தை பாதுகாக்கிறார்கள்.

  • உடல் எடை குறைகிறது

சிலர் நடந்தவாறே குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கம் இருக்கும்.  கையில் செல்போனை வைத்துக் கொண்டு மணிக்கணக்காக குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே நடந்து செல்வார்கள்.  இதனால் உடல் எடை குறைகிறது என்று இவர்களுக்கே தெரியாது.

Leave a Reply

Your email address will not be published.