தொழுநோய் தீர வேண்டுமா

99881947-Leprosy1

நோய்களில் எய்ட்ஸ், புற்றுநோய் தான் மிகக்கொடியது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் தொழுநோய் தான் மிகக்கொடியது.  ஏனென்றால் இந்நோய் தாக்கியதே தெரியாது குறைந்தது 10 வருடங்கள் வரையிலும் தெரியாது.  சிலருக்கு 5 வருடங்கள் ஆகும்.  இது நுண்கிருமிகள் தாக்குதலால் ஏற்படுகின்றது.

இந்த நோய் வந்த தாக்க ஆரம்பித்தவுடன் நோய்க்கிருமிகள் முதலில் தோலை தாக்கி கொப்புளங்களை வரச்செய்கின்றது.  பின் கிருமிகளை பரப்பி சீழ் வடியச்செய்து அந்தப்பகுதியை அழுகச்செய்கின்றது.  இந்த நோய், எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களை நன்றாகவே தாக்குகின்றது.  எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரை உடனே தாக்கவல்லது.

காரணங்கள்

  • காற்றின் மூலமே அதிகம் பரவும் இந்நோய் நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோய்யுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இவை பரவுகிறது.
  • நோய்த்தொற்று உள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் உயிர்கள் காற்றில் பரவுகிறது.
  • இது நாசி வழியாக உள் சென்று நோயெதிர்ப் பாற்றல் குன்றியவரைத் தாக்குகிறது. மேலும் இவை நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் இவை பரவுகிறது.

அறிகுறிகள்

  • உணர்ச்சியற்ற தேமல்.
  • நரம்புகள் தடித்துக் காணப்படுதல்.
  • தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.

மருத்துவங்கள்

சித்த மருத்துவ முறையில் இதை நீக்க வழியுள்ளது.  கவலை வேண்டாம்.  நோய் தாக்கியவரை ஒரே அடியாக ஒதுக்கி வைத்துவிடாதீர்கள்.

1. கடுக்காய் வேர், பட்டைவேர் பூ உலர்த்தி இடித்து சலித்து காலையும் மாலையும் அரை கரண்டி பசும்பாலில் கலந்து உணவுக்கு முன் உண்டு வரவும்.

2. சிவனார் வேம்பு செடி வேருடன் உலர்த்தி பொடி செய்து பணங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து பாலில் சாப்பிடவும்.

3. 50 வருடத்திற்கும் பழமையான வேம்புமரத்தின் பட்டை, பூவரசம் பட்டை, இரண்டையும் நன்றாக கலந்து அரைத்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் எடுத்து காலை மாலையில் பாலுடன் கலந்து சாப்பிட்டு விட வேண்டும். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்யவும்.

மேலும் தகவலுக்கு

Leave a Reply

Your email address will not be published.