ரமணா, சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ள துணை நடிகர் செல்வக்குமார் விபத்தில் மரணம்

download (1)

சின்னத்திரையில் “சின்னபாப்பா பெரியபாப்பா” உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள நடிகர் செல்வக்குமார் நேற்றிரவு விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் செல்வகுமார். அவர் விஜயகாந்த் நடித்த “ரமணா” உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தி.நகரில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி செல்வகுமார் உயிரிழந்தார்.

அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. செல்வகுமாரின் இந்த திடீர் மரணத்தால் சின்னத்திரையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.