பத்தாம் வகுப்பு மாணவருடன் மாயமான ஆசிரியை திருப்பூரில் கர்ப்பிணியாக மீட்பு

kotha lakshmi

ஒரு வருடத்திற்கு முன்னர் பத்தாம் வகுப்பு மாணவன் சிவசுந்தரபாண்டியனுடன் பள்ளி ஆசிரியை காதலித்து மாயமானது தமிழ் நாட்டில் பெரிய செய்தியாக பரப்பப்பட்டது.  எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.  இதனால் காவல் துறை சற்று இந்த வழக்கை விட்டுப்பிடித்தது. அவர்கள் விட்டுப்பிடித்தது வீண் போகவில்லை.  காணமல் போன காதல் தம்பதிகள் தன் தலையை வெளியுலகத்துக்கு காட்டினார்கள் திருப்பூரில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டனர்.

கடந்த ஓர் ஆண்டாக தலைமறைவாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியையும், மாணவரையும் திருப்பூர் பகுதியில் போலீசார் மீட்டனர். ஆசிரியை தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் நேற்று தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

இவர் நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தவர், கோதை லட்சுமி (வயது 23). இவர் கடந்த 2014–ம் ஆண்டில் 6 மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார். எல்.கே.ஜி. வகுப்புக்கு பாடம் நடத்தினார். அதே ஆண்டில் டிசம்பர் மாதம் முதல் அவர் வேலைக்கு செல்லவில்லை. எம்.எஸ்சி. பட்டதாரியான கோதைலட்சுமிக்கு, செங்கோட்டை அருகில் உள்ள காலாங்கரை சொந்த ஊர் ஆகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31–ந்தேதி கோதைலட்சுமி திடீர் என்று மாயமானார். அவரை பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால், அவரைப் பற்றி தகவல் தெரியவராததால், தந்தை கேசரி செங்கோட்டை போலீசாரிடம் புகார் செய்தார். கோதைலட்சுமி மாயமான நாளில், 10–ம் வகுப்பு மாணவர் ஒருவரும் மாயமானார். இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசில், புகார் செய்யப்பட்டது.

இருவரும் மாயமானது குறித்து 2 போலீஸ் நிலையங்களிலும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், ஆசிரியை கோதைலட்சுமி வேலைபார்த்து வந்த, அந்த பள்ளிக்கூடத்தில்தான் அந்த மாணவரும் 10–ம் வகுப்பு படித்து வந்தார் என்ற விவரம் தெரியவந்தது.

பள்ளிக்கூடத்தில் படித்து வந்த அந்த மாணவரும், ஆசிரியை கோதைலட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பள்ளிக்கூட இடைவேளை நேரங்களில் இருவரும் சந்திப்பது, வெளியிடங்களில் சுற்றித்திரிவது என்று இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவர் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் ஆசிரியையுடன், மாயமாகி விட்டார்.

தென்காசி பகுதியில் இருந்து கிளம்பிய அவர்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் என அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தனர். அவர்களுடைய நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை வைத்து இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில், அந்த மாணவரின் தாயார் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவரையும், ஆசிரியை கோதைலட்சுமி ஆகிய 2 பேரையும் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திருப்பூர் பகுதியில் இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து, அவர்களை பிடித்தனர்.

அந்த மாணவர் ஒரு பனியன் கம்பெனியிலும், ஆசிரியை கோதைலட்சுமி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். கோதைலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அங்கிருந்து இருவரையும் நேற்று மதியம் நெல்லை மாவட்டம் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மாலையில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த கோதைலட்சுமி கர்ப்பிணியாக மீட்டது பெரும் பரப்பை தமிழகத்தில் செய்தது.

ஆசிரியை கோதை லட்சுமி கூறுகையில், ‘என்னிடம் டியூசன் படிக்க வந்த சிவசுந்தரபாண்டியன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.  அவரை நான் காதலித்தேன். எங்கள் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கருதிய நாங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். பாண்டிச்சேரி கோயிலில் இருவரும் திருமணம் செய்தோம். எங்களது இருப்பிடத்தை அறிந்த போலீசார் தேடி வந்ததால் அங்கிருந்து கடந்த மே மாதம் திருப்பூருக்கு வந்து மில்லில் வேலை பார்த்தோம். தப்போது நான் 4 மாத கர்ப்பமாக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.  இருவரையும் போலீசார் நேற்று தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  இன்று  இருவரையும் ஐகோர்ட் மதுரை கிளையில்  ஆஜர்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.