உடலில் உள்ள கோர் தசைகளைப் பற்றி சில அடிப்படை விஷயங்கள்!

core dhasai

உங்களுக்கு வலுவில்லா கோர் தசை உள்ளதா?  அல்லது நீங்கள் தினந்தோறும் செய்யும் வேலைகளின் பொழுது ஒவ்வொரு முறையும் உங்களின் கீழ் முதுகு வலிக்கின்றதா என்ற கேள்வி சரியானதாக இருக்கும்.  இது பலமற்ற நிலையின் அறிகுறியாகும்.  இங்கு வலுவில்லா கோர் தசைகள் பற்றிய சில அடிப்படை உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  அதைப் படித்து அறிந்து கொள்வது அவசியம்.

உடலிலுள்ள கோர் தசைகள்

  • வலுவில்லா கோர் தசை என்பது என்ன?

கோர் தசைகள் சிக்ஸ் பேக் என்று அழைக்கப்படுகிறது.  சிக்ஸ் பேக் என்பது உடலின் முன் பகுதியில் உள்ள தசைகள் ஆகும்.   கோர் தசைகள் சிக்ஸ் பேக் மட்டுமில்லாது ஆப்லிக் மற்றும் கீழ் முதுகு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.  இந்த தசைகள் பலமற்றதாக இருந்தால் அதுவே வலுவற்ற கோர் தசை என்று அழைக்கப்படுகிறது.

  • வலுவற்ற கோர் தசையின் அறிகுறிகள்.

தசைகள் பலமற்றதாக இருந்தால் அதிக நேரம் சரியான நிலையில் நிற்கவோ உட்காரவோ முடியாது.  கோர் தசைகள் பலவீனமாக இருந்தால் இடுப்பு பகுதியின் நிலையை மாற்றச் செய்கிறது.  மற்றும் உங்கள் முதுகுத் தண்டில் அழுத்தம் கொடுப்பதன் விளைவாக கீழ் முதுகை வளைய செய்கின்றது.  கீழ் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் இது தெரிந்ததாக இருக்கும்.

  • கோர் தசை உருவாவதற்கு அவசியம் என்ன?

கோர் தசைகள் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தால் தான் நீங்கள் திறம்படவும் சிறப்பாகவும் செயல்பட முடியும்.  அதற்காக ஒருவர் சிக்ஸ் பேக் வைத்திருந்தால், அவரது கோர் தசை பலமாக இருக்கும் என்பதில்லை.  சிக்ஸ் பேக் என்பது கொழுப்பு குறைந்த உடலுக்கு ஓர் அடையாளமே தவிர பலமான தசைக்கு இல்லை.

  • ஒருவர் எத்தனை முறை கோர் தசை கொண்டு வேலை செய்கின்றார்?

அர்னவ் அமைத்த சில நடைமுறை வழிகாட்டுதலின்படி உங்கள் கோர் தசை தினந்தோறும் வேலை செய்கின்றது.  நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜிம்மில் கோர் பயிற்சிகள் செய்கிறீர்கள் என்பது இதன் அர்த்தம் ஆகாது.  நாம் ஜிம்மிற்கு வெளியேயும் கோர் தசைகளை பயன்படுத்துகிறோம்.  சில வேலைகளைச் செய்கிறோம்.  எனவே நீங்கள் உட்காரும் போதும் சரி, நடக்கும் போதும் சரி சரியான நிலையில் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • வலுவில்லா கோர் தசைகளை வலுப்படுத்துவதற்கான அர்னவ்வின்

குறிப்புகள்.

கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் கூன் போட்ட நிலையில் நாம் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது பலமில்லாத தசைக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.  எனவே நேராக உட்காருங்கள்.  நீங்கள் நிற்கும் போது உங்கள் வயிறு இணைந்திருக்காதவாறு உயரமாக நிற்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  • கோர் தசைகளை வலுப்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யும் பொழுது அழுத்தமாக இருக்கிறது என்று உணராமல் நன்றாக இயல்பாக ப்ரீயாக இருப்பதாக உணர்வீர்கள்.  பலமான கோர் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை ஒழுங்குபடுத்துகிறது.  கீழ் முதுகு வலித்தல் போன்ற பாதிப்புக்களை குறைக்கச் செய்ளகிறது.

  • கோர் தசைகளை வலுப்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடல் உறுதிப்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றது வலுவான கோர் தசை.  மற்றும் கீழே விழாமல் தடுக்கின்றது.  பொருட்களை மாற்றுதல் மற்றும் தூக்குதல், உட்காருதல், நிற்றல் போன்றவை ஒரு வேலையாக தோன்றுவதில்லை.  ஒவ்வொரு முறையும் நீங்கள் குனிந்து நிமிரும் பொழுது உஸ்……என்று மூச்சு விடுவீர்கள். இப்பொழுது  தானாகவே நிறுத்தி விடுவீர்கள்.

  • வலுவற்ற கோர் எவ்வாறு உங்கள் உடலை பாதிக்கின்றது?

முழங்கால் மற்றும் மூட்டுப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை மற்றும் இடுப்புப் பகுதியில் ஒழுங்கின்மையையும் வலுவற்ற கோர் தசைகள் இழக்கச் செய்கின்றது.  இந்த பலவீனம் அதிக அளவு வீழ்ச்சிக்கு வழி வகுக்கின்றது.  மேலும் பக்கவாட்டு இயக்கத்தை நிறுத்தி பலமற்றதாக ஆக்குகின்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.