வாய் துர்நாற்றம் தீர வேண்டுமா

download (17)

சிலரது அருகில் செல்லவே முடியாது. அவர்கள் பேசினாலே வாயில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும்.  இந்த வாய்துர்நாற்றம் பேசுபவர்களுக்கு சுத்தமாக தெரியாது… பேச்சை கேட்பவர்களுக்குதான் தெரியும் வாய் துர்நாற்றம் ஏன் வருகின்றது,?

காரணம்:

வாய்துர்நாற்றம் என்பது பற்களில் கிருமிகள் தோன்றுவதால் வருவது.  தினமும் காலையில் எழுந்து பற்களை துலக்கினாலும் காலை நேர உணவு உண்ணும் வரையில் தான் வாடை அடிக்காமல் இருக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக வாடை அடிக்கும்.

உணவு பற்களுக்கு இடையில் சி்க்கிக் கொள்வதாலும் இந்த வாடையானது அடிக்கின்றது.  வாயில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதாலும்.  பிராணவாயு  இல்லாமல் இருப்பதால் கிருமிகள் வளர்ந்து நம் வாயில் தீய வாடை அடிக்கின்றது.

சைவ உணவுகளை விட அசைவ உணவுகள், சிகரெட், மது போன்ற பழக்கங்களை உடையவர்களுக்கு அதிகமாக வாடையானது பற்களில் அடிக்கின்றது.

வயிற்றில் அல்சர் வருவதாலும், கொப்புளங்கள் இருப்பதாலும், வாய்ப்புண்கள் இருப்பதாலும் வாயில் துர்நாற்றம் அடிக்கின்றது.

வாய் நாற்றம தீர:

நெல்லி முள்ளி, தான்றிக்காய் கடுக்காய் இம்மூன்றையும் குடிக்கும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைதது வாய் கொப்பளிக்க வேண்டும்.

கோதுமையின் பல்லை வாயில் மெல்ல வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாயை சாப்பிட்டப்பின்பு ஒவ்வொரு முறையும் தண்ணீர் விட்டு நன்றாக கொப்பளித்து துப்பிவிடவும்.

ஏலக்காய் விதைகள், இஞ்சித்துண்டு ஆகியவற்றை வாய்க்குள் வைத்துக் கொண்டிருந்தால் வாயில் துர்நாற்றம் வீசாது.

Leave a Reply

Your email address will not be published.